Monday, December 23, 2024
Home > வகையற்ற > என் மீது தான் எத்தனைக் கண்கள்… – #கவிதை

என் மீது தான் எத்தனைக் கண்கள்… – #கவிதை

வெற்றிவாகை சூடினேன் குத்துச்சண்டையில்…

பேருந்தில் ஏறினேன் ஊருக்கு திரும்பும் வேளையில்…

பயணக்களைப்பில் கண் அயர்ந்தேன்…

விளித்துப் பார்த்தால்…

என் மீது தான் எத்தனைக் கண்கள்…

 

பெண்ணாய் பிறந்தது என் தவறா?

முலைகள் இருப்பது என் தவறா?

விடிவான இடுப்பு என் தவறா?

மாநிறமாய் இருப்பது என் தவறா?

தவறேதும் நான் செய்திராமல்…

என் மீது தான் எத்தனைக் கண்கள்…

 

குத்துச்சண்டை மாணவிதான்…

கையால் குத்தவந்தால் தடுத்திடலாம்…

வார்த்தையால் குத்தினாலும் திருப்பி கொடுத்திடலாம்…

ஆனால்…

பார்வையால் குத்தும் காமூகர்களை…

என்ன செய்ய…

நான் என்ன செய்ய…

பள்ளி மாணவன் முதல் பல்லுபோன கிழவன் வரை…

என் மீது தான் எத்தனைக் கண்கள்…

 

தனிமையான பேருந்து பயணம் எப்போது…?

ஆண் துணையில்லாமல் பாதுகாப்பாக உணரும் தருணம் எப்போது…?

ஆண்களை நினைத்து நினைத்து எக்கவலையும் இல்லாத எண்ணம் எப்போது…?

ஆணை அலைபேசியிலாவது துணைக்கு அழைக்கும் இச்சமூகத்தில்…

என் மீது தான் எத்தனைக் கண்கள்…

 

வருபவன் எல்லாம் போலி…

பழகுபவன் எல்லாம் துரோகி…

எனக்கானவன் கிடைக்காமல் போனால் நான் ஏன் இச்சமூகத்தில் ஒரு பாவி…

என் சிரிப்பிற்குத் தான் எத்தனை அர்த்தங்கள் இந்த உலகிலே…

அதனாலே…

என் மீது தான் எத்தனைக் கண்கள்…

 

என்னைத் தருவேன் காதலுக்காக…

ஆனால்…

காதலன் தான் எவனோ…

அதுவரை…

என் நிழலைக் கூட விட்டுவைக்காத இவ்வுலகிலே…

என் மீது தான் எத்தனைக் கண்கள்…

 

 .கா.

அணுஅணுவாய் நினைவிருப்பாய்… என் நினைவிருக்கும் வரை

ஜனவரி 23, 2022.

காலை 10:36 மணி…