ஆயிரம் முறை பார்த்திருப்பேன் அவளின்
புகைப்படத்தை…
அன்று முதன்முதலில் பார்த்தேன் நேரில்
அவள் தேவதை…
மறுமணம் வேண்டாம் என்றிருந்தேன்
அதுவரை…
திருமணம் அவளுடன் தான் என்று எழுதினேன்
முடிவுரை…
பேச துடித்தேன் அவளிடம்…
பேசியதும் அவளிடம் அடைந்தேன் புகழிடம்…
நிச்சயக்கப்பட்ட திருமணம்…
காதல் திருமணமாய் ஆனது…
என் மனம் திறந்து…
இந்த உலகம் மறந்து…
சுற்றம் எல்லாம் துறந்து…
அவள் மேல் பிறந்தது பித்து…
எனக்கு அவளொரு முத்து…
என் வலிகளெல்லாம் அழித்து…
புது வாழ்க்கை கொடுத்தாள் அமைத்து…
எனக்குள் அவள் அன்பை விதைத்து…
எல்லையில்லாமல் காதலித்து…
இன்பத்தை அணிவகுத்து…
துன்பத்தை கருவறுத்து…
என்னையே மறகடித்து…
மறுமணமான திருமணத்தை…
ஆக்கினாள் அவள்…
புதுமணமாய்…
– உ.கா.
அணுஅணுவாய் நினைவிருப்பாய்… என் நினைவிருக்கும் வரை…
மார்ச் 27, 2022.
இரவு 10:10 மணி…
அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்!