“அபி… அபி…”
யாரோ என்னை அழைக்கும் குரல் கேட்டது.
சட்டென்று திரும்பிப் பார்த்தேன்.
“இங்க வாம்மா” என்று நான் வந்திருந்த சூர்யா மருத்துவமனை செவிலியர் என்னை அழைத்தார்.
“எவ்வளவு நாள் டேட் தள்ளி போயிருக்கு”
“15 நாள்”
“டெஸ்ட் எடுத்துப் பாத்தீங்களா”
“ஆமா சிஸ்டர்”
“எதுக்கும் இங்க வந்து பிளட் டெஸ்ட் எடுத்துப்பாக்கலாம்-னு வந்தேன் சிஸ்டர்”
“அது மேடம் சொல்லுவாங்க”
“சரிங்க சிஸ்டர்”
“இந்தாங்க. போயி டெஸ்ட் எடுத்துட்டுவாங்க” என்று சிஸ்டர் ஒரு சீட்டை கொடுத்தார். அதில் சிறுநீர் கார்ப்ப பரிசோதனை செய்து, முடிவுகளை கொண்டு வருமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மூன்றுமுறை நானாக இந்த பரிசோதனையை செய்துப் பார்த்துவிட்டேன். எதிலும் பாசிடிவ் ரிசஸ்ட் வரவில்லை, டேட்டும் ஆகவில்லை என்பதால் குழப்பமாக இருந்ததைப் பார்த்து என் கணவர் தான் என்னை வற்புறுத்தி மருத்துவமனைக்கு அழைத்து வந்தார்.
செவிலியர் மீண்டும் பரிசோதனை செய்ய சொன்னதை அவரிடம் சொன்னேன்.
“சரி போய் எடுத்துட்டுவா” என்று என்னை அனுப்பி வைத்தார்.
ஏற்கனவே வந்ததைப் போலவே இம்முறையும் முடிவு சாதகமாக வரவில்லை.
வருத்தமாக அந்த