Monday, December 23, 2024
Home > கவிதை > மின்னலே அடித்தது என்மேலே – #கவிதை

மின்னலே அடித்தது என்மேலே – #கவிதை

பலமுறை அவளை பார்த்திருக்கிறேன்….

சிலமுறை அவளிடம் பேச முயன்றிருக்கிறேன்…

அவளை நான் பார்க்காத நாளில்லை….

அவளை பார்ப்பதில் கிடைக்கும் ஆனந்தத்திற்கு எல்லையேயில்லை…

அவளருகில் செல்ல மனத்தில் வீரமில்லை…

அவள் என்னருகில் வரும் வேளையில், என் இதய துடிப்பிற்கு அளவேயில்லை…

ஏனோ…

சில நாட்களாக அவள் வரவில்லை…

எங்கு தேடியும் என் கண்களில் அவள் படவில்லை…

அவளை காணாத துயரிலிருந்து நாள் மீளவில்லை…

நானாக சிரித்தேன், ஏன்னென்று தெரியவில்லை…

துன்புற்றேன், எதற்கென்று புரியவில்லை…

ஆனால்…

அவள் பேரும் தெரியாது…

அவள் ஊரும் தெரியாது…

இருந்தும்…

அவளை காணும் போது ஏதும் தோன்றியதில்லை…

அவளை காணாததில், அவளை தவிர வேறேதும் தோன்றவேயில்லை…

அன்று…

சூரியனின் தாக்கம் தனிந்து…

மனம் முழுவதும் சோர்வடைந்து…

அவளை நினைத்து நினைத்து…

காத்திருந்தேன்…

அவளுக்காக…

எங்கிருந்தோ வந்தாள்…

என்னைப் பார்த்தால்…

பார்த்தவுடன் சிறுகுழந்தையாய் சிரித்தாள்…

அவள் கண்கள்…

என் கண்களை தேடித்தேடி பார்த்ததில்…

மின்னலே அடித்தது என்மேலே…

 .கா.

அணுஅணுவாய் நினைவிருப்பாய்… என் நினைவிருக்கும் வரை

ஏப்ரல் 21, 2023.

இரவு 10:13 மணி…