ஏழு வருட காதலையும் துச்சமென தூக்கி எறிந்தாள்
அவள் தம் பெற்றோர் சம்மதம் பெறமுடியாமல்…
அகமகிழ்ந்த காதலையும் வேண்டவே வேண்டாம் என்றாள்
அவள் தன் மனதை கல்லாக்கி…
அவள் முடிவு இதுதான் எனில்
எழுவருடமாய் அவள் தன் காதலை அள்ளித்தந்தது ஏனோ…?
என்னுடன் சேர வழியேயில்லாமல்
என்னை காதலித்து என்னுடன் சேர அவள் நினைத்தது என் தவறா…?
என் இன்பத்திலும் துன்பத்திலும் அவள் பங்கெடுத்தது
என்னை அவள் மீளத்துயரில் தவிக்கவிடத்தானோ…?
துன்பமென்னும் தெரிந்தும் அவள் என்னைப் பிரிந்தாள்
அது ஏனோ…?
அவளை மறக்க நினைக்காத நாளில்லை…
முயன்று… முயன்று…
முடியாமல்…
அவளை நினைக்க தவறாத நாளுமில்லை…
எழு வருட காதல் முறிந்து
வருடங்கள் ஏழானாலும்…
அவள் மேல் நான் கொண்ட காதலில்
மாற்றமில்லையே…
என் வாழ்வில் இனி எத்தனை பெண்களைக் நான் கடந்தாலும்
அது அவளாகுமா…?
ஆகாதே…
இப்பிறவியில் அவள் என்னவளில்லை எனில்
எப்பிறவில் அவள் என்னவளாகப் போகிறாள்…?
ஆனாலும்…
அவளை வாழ்த்துகிறேன் இப்போது…
என் மனைவி மக்களுடன்…
அவள் எப்போதும் நலமாய் இருக்க…
ஏனெனில்
ஆகிவிட்டது அவளுக்கு திருமணம்…
அவள் வேண்டிய படியே…
அவள் பெற்றோர் ஆசியுடன்…
முழுமையானது அவளின் ஆசை…
நிராசையாய் மாறியதே எனது ஆசை…
இருப்பினும்…
என்னவளே…
என் மனதின் நிரந்தர பட்டத்து இளவரசியே…
நீ…
வாழ்க வாழ்க வாழ்கவே…
என்னிடத்தில் உன் வாழ்வில் யாரோ…
ஆனாலும்…
உனக்கான இடத்தில் இருக்கிறாள்…
பேரன்புடன்…
என் அன்பு மனைவியாய்…
என் மனமென்னும் சிம்மாசனத்தில்…
அப்போதும் சொன்னேன்…
இப்போதும் சொல்கிறேன்…
எப்போதும் சொல்வேன்…
என் மேல் நீ கொண்ட காதல் தோற்கினும்…
உன் மேல் நான் கொண்ட காதல் தோற்காதே…
ஏனெனில்…
காதலர்கள் தோற்கினும், காதல் தோற்காது…
காதல் என்றென்றும் தீராக் காதல்…
– உ.கா.
அணுஅணுவாய் நினைவிருப்பாய்… நீ… என் நினைவிருக்கும் வரை…
ஜூன் 19, 2023.
நண்பகல் 12:00 மணி…