உடைந்த இதயம்
உடையாத காதல்
மலரும் நினைவுகள்
மலராத நிஜங்கள்
கேளாயோ கண்மணியே
நினைவில் மருவிய மோதல்
கனவில் காவிய காதல்
கேளாயோ கண்மணியே
கண் தேடி
கை தீண்டி
விரல் கோர்த்து
நான் இருக்கிறேன்
நான் இருப்பேன்
இனியும்
கரைந்துப்போன சீரிய உறவு
மறைந்துப்போன பெரிய கனவு
கேளாயோ கண்மணியே
எது எனது
எது உனது
அறியாமல்
நமதாய்
கரைந்த காலங்கள்
கேளாயோ கண்மணியே
ஆனந்தம் பிறந்த நாட்கள்
கவலைகள் இறந்த நாட்கள்
பிரிவும் இறப்பும்
இருவரும் சேர்ந்து சந்தித்த நாட்கள்
கேளாயோ கண்மணியே
இசை உருவாக
இசையின் உருவாக நீ ஆக
இசையே நீ ஆக
இசை எங்கும் ஆக
நீ எங்கும் ஆக
கேளாயோ கண்மணியே
காற்றோடு இணைந்து
உலகத்துடன் உருண்டு
மேகத்துடன் சுழன்று
இணைந்தே வாழ்வோம்
சேராமல் போனாலும்
கேளாயோ கண்மணியே
– ஹைக்கூ எழுதியவர் என் தோழி (இதன் மூலம்)