Monday, December 23, 2024
Home > சிறுகதை > பொண்டாட்டி சார் – #சிறுகதை

பொண்டாட்டி சார் – #சிறுகதை

“என்னாது?”

“ஓ அத உனக்கு அனுப்பிட்டேனா?”

“சாரி”

“சாரி”

“அத என் டீம்ல இருக்கற பொண்ணுக்கு அனுப்பறதுக்கு உனக்கு அனுப்பிட்டேன்”

“சாரி டா”

“சரி விட்டுத் தொல”

“ப்ளிஸ் மன்னிச்சு”

*****

“ஒண்ணும் புரியல”

“இட்ஸ் டூ இண்டர்பிரட்”

“இதுல என்னத்த இண்டர்பிரட் பண்ணனும்”

“அது நல்லா இருக்குனு வெச்சது, நீ ஃபிர்யா விடு”

“என்னத்தயோ சொல்லிட்டு திரியுற”

*****

“யாருக்கோ தகவல் கொடுக்கறனு மட்டும் தெரியுது”

“ஆனா யாருக்குனு தெரியல”

“எனக்கு ஒன்னும் புரியல”

“பட். கீப் கோயீங்”

“லூசு”

“அது ஒரு சைக்காலஜி ஸ்டேட்டஸ்”

“ஓ நீ அப்படி சொல்ற”

“அட ஆமா பா ஆமா”

*****

“இரு படிச்சிட்டு சொல்றேன்”

“ஏன் பா?”

“என்னத்த படிச்சிட்டு சொல்ற”

“என்ன ஏன்பா?”

“மாத்தி அனுப்பிட்டேன்”

“அச்சச்சோ ஒரு மார்க்கமா தான் பா இருக்க நீ”

“என்ன டா”

“நீ எல்லாம் மெசெஜ் மாத்தி அனுப்ப மாட்டியா?”

“இது ஒரு குத்தமா…?”

*****

“அதெல்லாம் நிறைய அனுப்பி இருக்கேன்”

“ஒரு சேம்பிள் சொல்றேன் கேளு”

“ஒரு முற என் பொண்டாடிக்கு அனுப்ப வேண்டியத,

 என் பேங்க் ரிலேசன்ஷிப் மேனேஜருக்கு அனுப்பிட்டேன்”

“அப்படி என்ன அனுப்புன?”

“ஒரு ரெண்டு நாளு கழிச்சி பேங்குக்குப் போனா,

 அந்த மேனேஜர் பொண்ணு என்னை பாத்து பாத்து மொறைக்கிறா”

“ஓ மேனேஜர் பொண்ணா?”

“என்னடா இவ, எப்பையும் பாத்து சிரிப்பா,

ஹாய் சார்னு சொல்லுவா,

 இப்ப இப்படி மொறைக்கிறா-னு குழப்பம்”

“போன வேலைய முடிச்சிட்டு வந்துட்டேன்”

“என்னாட பூஸ்ஸுனு போயிடுச்சு”

“இன்னு முடியல டா, கேளு”

“ஒரு ரெண்டு வாரம் கழிச்சி,

ஒரு செக் கலெக்‌ஷன் போட பேங்குக்கு போறேன்”

“அப்பயும் அவ மொறச்சிட்டிருக்கா”

“ஆனா, எதுக்கு மொறைக்குறானு தெரியல”

“க்யுபிக்ல இருந்து என்ன பாத்து வந்தாங்க”

“நீங்க இப்படி பண்ணுவீங்கனு எக்ஸ்பெக்ட் பண்ணல சார்”

“சாரி சார்னு போயி க்யுபிக்லையே உட்கார்துட்டாங்க”

“அப்படி என்னா டா பண்ண”

“நான் என்ன பண்ணீட்டேனு யோசிச்சுட்டே வண்டிக்கிட்ட வந்தேன்.”

“பொண்டாட்டி போன் பண்ண”

“என்னடினு கேட்டேன், வாட்ஸ்-ஆப்ல லிஸ்ட் அனுப்பிருக்கே வாங்கிட்டு வானு சொன்னா”

“வாட்ஸ்-ஆப் ஓபன் பண்ணி பாத்தா”

“ஓபன் பண்ணி பாத்தா? சொல்லு டா சொல்லு”

“ஒரு பேங்க் டாக்குமெண்ட பொண்டாட்டிக்கு அனுப்பிருந்தேன்”

“பொண்டாட்டிக்கு அனுப்ப வேண்டியத,

ஐ லவ் யூ பொண்டாட்டினு

 மேனேஜருக்கு அனுப்பிருக்கேன்”

“சரியான ஆளுடா நீ”

“அப்புறம் திரும்ப போயி, ரிலேஷ்ன்சிப் மேனேஜர் பொண்ணுகிட்ட சாரி கேட்டு”

“ரொம்ப ஷேமா போயிடுச்சி டா”

“இப்பெல்லாம், எப்ப பேங்க போனாலும்,

பொண்டாட்டி சார் – இன்சூரன்ஸ் போடலாமா,

பொண்டாட்டி சார் – அந்த கிரிடிட் கார்ட் அப்ளை பண்ணலாமா

அப்பிடினு கலாய்கிறாங்க”

“உனக்கு வேணும் டா”

“நல்ல வேளை அவங்க புருஷன் அத பாக்கல”

“அட அவங்களுக்கு இன்னு கல்யாணமே ஆகல”

“ஆயிருந்த, இந்நேரம் உன்ன டின்னு கட்டிருப்பாங்க”

“காட் சேவ்டு மீ”

“அதனால தான் சொல்றேன்,

கேர்லஸ் மெசேஜிங் இஸ் ஹாம்புல் மக்களேனு”

“ஓகே பாயிண்ட் அக்சப்டேட்”

“ஹார்ட் எமோஜி”

“நோட்டேட்”

“ஸ்மைலி எமோஜி”

– எழுத்து: பட்டிக்காடு

– தொடர்புக்கு : pattikaadu@outlook.com, writerpattikaadu@gmail.com

– மேலும் படிக்க : https://www.pattikaadu.com