கேள்வி: தமிழக தேர்தல்களம் பற்றிய உங்கள் கருந்து என்ன?
பதில்:
இன்றைய தமிழக தேர்தல் களத்தைப் பற்றி தேர்தல் முடிவு வரும் வரை எந்தக் கருத்தும் சொல்லக் கூடாது என்று தான் இருந்தேன். அரசியலில் காட்சிகள் மிகவும் ஆபாசமாகவும், அபத்தமாகவும் சென்றுக் கொண்டிருக்கிறது. நாளுக்கு நாள் அரசியல் நாகரிகம் என்பது கிலோ எவ்வளவு என்பதைப் போல நம் தலைவர்கள் நடந்துக் கொள்வது எனக்கு மிகுந்த மன உளைச்சலைத் தந்துக் கொண்டிருக்கிறது என்பதனால் கருத்துச் சொல்ல விரும்பவில்லை. ஆனாலும் சொல்ல வைத்துவிட்டது நிலைமை.
பட்டிக்காடு தளம் தனது கருத்தினைக் கூறாமல் இருக்க மேலும் சில காரணங்கள் இருக்கின்றன. அவை
- அதிமுக+, திமுக+, தேமுதிக+மநகூ, பாஜக, பாமக, நாம் தமிழர் என பல முனைப் போட்டியை தமிழகம் சந்திக்க இருக்கிறது. இவர்களுள் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கூட்டணிக்கு மட்டும் தான் ஆட்சிக் கட்டிலில் உட்கார வாய்ப்பு இருக்கிறது என்பது உண்மை. ஆனால் இரண்டும் ஆட்சி அமைக்கத் தகுதி படைத்த கூட்டணிகயா? என்று எழும் கேள்விக்கு பதில் சொல்ல விரும்பவில்லை. ஆகவே கருத்துக் கூற விரும்பவில்லை.
- அதிமுக, திமுக ஆகிய இரு கூட்டணிகளும் எவ்வளவு வாக்குகள் வாங்கப் போகின்றன என்பதனை விட மற்ற எல்லோரும் எவ்வளவு வாக்குகள் வாங்கப் போகிறார்கள் என ஆர்வமாக இருக்கிறேன்.
- இத்தேர்தலில் 35 சதவீத வாக்குகள் மேல் எந்தக் கூட்டணிக்கு கிடைத்தாலும் அக்கூட்டணியே இந்த தேர்தலில் வெல்லும் என்பதால் கருத்துக் கூற விரும்பவில்லை.
- தேர்தலின் முடிவிற்குப் பிறகு தான் தமிழகத்தில் மிகப் பெரிய விவாதம் கிளம்பப் போகிறது என் கணிப்பு. 2016 தேர்தலுக்கு முன், பின் என தமிழக அரசியல் வரலாற்றை பிரித்து எழுதப் போகிறோம் என்பதனால் இப்போதே கருத்துக் கூறி எனது ஆற்றலை வீணாக்க விரும்பவில்லை.
- இத்தேர்தல் முடிவு பல கட்சிகளுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியைத் தரப் போகிறது. இத்தேர்தலோடு பல கட்சிகளும் காணாமல் போகப் போகின்றன, அவற்றுள் ஒரு சில கட்சிகள் மட்டுமே மீண்டு வரும் நிலை வரலாம்.
- பல புதியப் புதிய அதிகார மையங்களும், புது முகங்களும், புதிய கட்சிகளும் உருவாகப் போகின்றன. இன்று பல கட்சிகளில் அதிகார மையங்களாக இருக்குப் பலர் காணாமல் போகப் போகின்றனர்.
- எனக்கு என்னவோ தமிழகம் மக்கள் 2016 தேர்தலில் பெரும் புரட்சி செய்ய காத்திருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. எப்படியும் 2021 தேர்தல் தான் களத்தில் இருக்கும் பல கட்சிகளுக்கு இலக்காக இருக்கப் போகிறது திமுக உட்பட. அப்படியான நிலையில் 2021 எந்த எந்தக் கட்சிகளுக்குள் மோதல் பிரதானமாக இருக்கப் போகிறது என்பதற்கான முன்னோட்டமாக 2016 தேர்தல் முடிவுகள் மாறினாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.
இன்னும் இதேப் போல பல காரணங்களைக் அடுக்கிக் கொண்டே போகலாம். ஆகவே இத்தேர்தலில் அமைதியாய் வெறும் பார்வையாளனாய் எல்லாவற்றையும் மனதிலும் மதியிலும் பதிவு செய்துக் கொண்டிருக்க பட்டிக்காடு தளம் முடிவு செய்துவிட்டது.
*****
ஆனால் எனக்கொரு பேராசை என்ற தலைப்பு எதற்காக? என்ற குழப்பத்திற்கான பதில் இதோ…
“ஸ்டிங் ஆபரேசன் என்ற எமாற்று நடவடிக்கைகள் தமிழக அரசியலில் மிகவும் அரிது. மேலை நாடுகளில் வட இந்தியாவிலும் அதிகம். எடுத்துக்காட்டாக மேற்கு வங்கத்தில் தற்போழுது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சிலர் இப்படியான ஸ்டிங் ஆபரேசனில் மாட்டிக் கொண்டு நம்ம மம்தா திதியிடம் வாங்கிக் கட்டிக் கொண்டார்கள். அதே போல முரசு கட்சியைச் சார்ந்த சிலர் சூரிய கட்சியில் சேருகிறேன் என்று பேரம் பேசுவதை இரகசியமாக படம் பிடித்து வைத்திருப்பதாகவும், அதனை வெளியிடப் போவதாக செய்திகள் வருவதாகவும் எனக்கு தகவல் வருகின்றது. அதே போல இலைக் கட்சியின் சில பேரங்களும் படம் பிடிக்கப் பட்டிருப்பதாகவும் அந்த நம்பகரமான தகவல் சொல்கிறது.
இதில் எந்த அளவிற்கு உண்மை இருக்கும் என்பதனை உங்களின் கற்பனைக்கே விட்டு விடுகிறேன். இந்த ஒரு வேளை இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அது இத்தேர்தலில் எப்படியான அதிர்வலைகளை எற்படுத்தும்.? எனக்கு என்னவோ 2016 தமிழக தேர்தலில் ஸ்டிங் ஆபரேசன்கள் வெளியாகி தேர்தல் களமே மிகப் பரப்பரப்பாக இருக்கப் போகிறதோ என்று தோன்றுகிறது.”
– இன்னும் நிறைய இருக்கு மக்களே…