பெரியார் ஒருமுறை சொன்னார், “எனது உரைநடைகளில் வரும் எந்தக் கருத்தையும் அப்படியே ஏற்க வேண்டாம்; சிந்தித்து சரியெனப்பட்டால் மட்டும் ஏற்றுக் கொள்ளுங்கள்”. எனக்கு தெரிந்த வரைவில், இதனையொட்டிய கருத்தை சொன்ன இன்னொரு நபர் காந்தியடிகள் மட்டுமே. அவர்கள் ஏன் அப்படி சொல்ல வேண்டும்? காரணமில்லாமல் இல்லை, எந்த ஒரு சமுதாயத்தில் சுய சிந்தனையும் சமத்துவமும் மேலோங்கியிருக்கிறதோ அங்கே திணிப்பிற்கு வேலை இருக்காதல்லவா! ஆகவே தான் அவர்கள் இருவரும் தங்களின் கடைசி நாட்கள் வரை திணிப்பிற்கு எதிராக வாழ்நாள் முழுவதும் அர்ப்பணித்தனர்.
திணிப்பு என்பது வலுக்கட்டாயமாக ஒரு கருத்தினை ஒருவர் மனதில் பதிய வைப்பது. வலுக்கட்டாயமாக மட்டும் தான் திணிக்கப்பட வேண்டும் என்பதில்லை, சாமர்த்தியமாகவும், பலவந்தமாகவும், பல சமயங்களில் திணிப்பதே தெரியாத அளவிற்கு நடைபெறுவது தான் திணிப்பு. இன்றைய நுகர்வுக் காலச் சக்கிரத்தில், திணிப்பு என்பது சர்வசாதாரணம். திணிப்பினால் மனிதன் தன் தேடலை விட்டு விலகிச் செல்வதே மனித குலத்திற்கு ஏற்பட்டுள்ள மிகப் பெரிய ஆபத்து. அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. திணிப்பு என்ற கொடிய நஞ்சினைப் பற்றி மிக விரைவிலே விரிவாக தீவிரமாக விவாதிப்போம்.
பட்டிக்காடு வலைப்பக்கத்தின் நான்காவது வரையறை யாதெனில்,
”ஒரு கருத்தை எப்போதும் பட்டிக்காடு தளம் திணிக்காது. எந்த ஒரு கருத்தும் விவாதத்திற்குட்பட வேண்டும், சாதபாதகங்கள் அலசப்பட வேண்டும் என்பது மட்டும் தான் பட்டிக்காடு தளத்தின் வாதம்”
– திணிப்பை தவிர்ப்போம்.
Indha mari lam yosika mudiyuma nu therila.but the views are correct.super uh iruku.ipdiyum elathayum paka kathukudukudhu indha pattikaadu thalam.valthukal