Monday, December 23, 2024
Home > இலக்கு > வரையறை

வரையறை

 வரையறைகளின் சுருக்கம் இதோ.

  • ”சரியான தரவுகளின் (Source) அடிப்படையில் மட்டுமே இந்தப் பட்டிக்காடு தளத்தில் ஒரு சம்பவம், பேட்டி, விபத்து, கொண்டாட்டம், வெற்றி, தோல்விப் பற்றி கருத்துப் பகிரப்படும்” – அவசரமில்லாமல் அசரடிப்போம்.
  • வாசகர்களை, உண்மைக்கு மிக அருகில், கொண்டு சேர்ப்பதே இத்தளத்தின் பாணி. உண்மைகள் இது தான் என்று முடிவு செய்வது வாசகராகத் தான் இருக்க வேண்டும். அப்போது தான் சமூக மேம்பட்டுக் கொண்டிருக்கிறது என அர்த்தம்” – உண்மைகளில் உண்மையைத் தேடுவோம்.
  • “அடையாளம் என்பது மனிதனின் அடிப்படை உரிமை. பட்டிக்காடு தளம் எப்போதும் சக மனிதர்களின் அடையாளங்களை முன் அனுமதியின்றி பயன்படுத்தாது.”     –     அடக்கமாய் அலசுவோம்.
  • ”எந்த ஒரு கருத்தினையும் பட்டிக்காடு தளம் என்றும் திணிக்காது. எந்த ஒரு கருத்துக்கும் விவாதத்திற்குட்பட வேண்டும், சாதபாதகங்கள் அலசப்பட வேண்டும் என்பது மட்டும் தான் பட்டிக்காடு தளத்தின் வாதம்” – திணிப்பை தவிர்ப்போம்.
  • ”வரலாறு என்பது அவரவர் வசதிக்கேற்ப திருத்தப்படுகிறது. பட்டிக்காடு தளம் வரலாற்றிலுள்ள மறக்கப்பட்ட, மறைக்கப்பட்ட, அதிகம் விவாதிக்கப்படாத அர்த்தங்களைத் தேடும், விவாதிக்கும். வரலாற்றை மறு கட்டமைப்பு செய்வதே தளத்தின் நோக்கம்” – வரலாற்றை மீட்ப்போம்.

– விரைவில் விவரமாய்.