முதலில் எல்லோருக்கும் இனிய பொங்கல் திருநாள், தமிழர் திருநாள், தைத்திருநாள், தமிழ்வருடப்பிறப்பு திருநாள், மாட்டுக்பொங்கல் திருநாள், காணும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள். (ஏதாவது… விட்டுவிட்டேனா?)
எடப்பாடி பழனிசாமி முதல்வராக பெறுப்பேற்று ஒரு வருடம் நிறைவுப்பெறப் போகிறது. இந்த ஒரு வருடத்தில் தமிழகத்தின் பல உரிமைகளை மத்திய அரசிடம் பறி கொடுத்தது மட்டுமே முதல்வராக எடப்பாடி பழனிசாமி சாதித்த சாதனை. எம்ஜிஆர், ஜெயலலிதா வளர்த்தெடுத்த, வழி வந்த அதிமுக ஆட்சியாகயில்லாமல், மத்திய அரசின் கைப்பாவையாக, மோடியின் அடிமையாக, அமித்ஷாவின் கைக்கூலியாக ஆட்சி புரிந்துக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி என்னும் இபிஸ்.
எம்ஜிஆர் நூற்றாண்டு விழா என்ற பெயரில் தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும், அரசு செலவி வழா நடத்தியது இந்த மோடியின் கைக்கூலி அரசு. எம்ஜிஆரைக் கொண்டாடுகிறோம் என்ற பேர்வழியில், முதலில் ஓ. பன்னீர்செல்வத்தை எதிர்த்து, செல்வாக்கை இருப்பதைப் போல காட்டிக்கொள்ளவே, சசிகலா, தினகரன் கூட்டணியின் துணையுடனே, எடப்பாடி பழனிசாமி அரசு எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை கொண்டாடியது.
மத்தியில் இருந்து மோடியிடம் அப்போது ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஸ்) விசுவாசமாக இருந்தார். ஆனால், மோடி-அமித்ஷா எதிர்பார்த்த அளவிற்கு பன்னீர்செல்வத்தின் பின்னால், எம்எல்ஏக்கள் அணிவகுக்காததால், மோடி-அமித்ஷாவின் பார்வை எடப்பாடி பழனிசாமி மீது திரும்பியது. முதலில் இறங்கிவர மறுத்த எடப்பாடி பழனிசாமியை ஐடி ரெய்டு, சிபிஐ ரெய்டு என ரஜினியின் சிவாஜி பட ஆபிஸ் போல அன்பாக கையாண்டு வழிக்கு கொண்டுவந்தனர். அதற்கு எடப்பாடி பழனிசாமி கொடுக்க மோடி-அமித்ஷாவிற்கு வேண்டிய பரிசு, சசிகலா-தினகரன் கோஷ்டியை கட்சியிலும் ஆட்சியிலும் இருந்து வெளியேற்றுவது. அதற்கு பதிலாக பன்னீர்செல்வம் கோஷ்டியை கட்சியிலும், ஆட்சியிலும் இணைத்துக் கொள்வது. எல்லாம் நல்ல படியாக நடந்தேறியது. அதன் பிறகு, எம்ஜிஆர் நூற்றாண்டு விழா என்பது, ஓபிஸ்-இபிஸ் அணியின் தற்புகழ் பாடும் விழாவாக மாறியது. ஒரு கட்டத்தில் ஓபிஸ் ஓரம்கட்டப்படுகிறார் என்றெல்லாம் செய்திகள் றெக்கைக் கட்டிப் பறந்தன.
எம்ஜிஆர் நூற்றாண்டு விழா என்ற பெயரில் நடந்த அட்டுழியங்கள், அராஜகங்கள், அதிகார மீறல்கள், சொல்லிமாளாது. காமராஜர், அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றவர்கள் கூட இந்த மாதிரி நடந்துக்கொண்டதில்லை. எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவின் போது ஓபிஸ்-இபிஸ் அணியினர் போட்ட ஆட்டத்தை மக்கள் துளிக்கூட ரசிக்கவில்லை. ஆட்சி அதிகார மமதையில் இருப்பவர்களுக்கு இது இன்னும் புரியவில்லை. மக்களிடம் எதிர்பார்ப்பை சம்பாதிக்க மட்டுமே எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பயன்பட்டது என்பதே உண்மை. அதனால், மக்களுக்கு ஏற்பட்ட இன்னல்கள் பற்றி இந்த அரசிற்கு கவலையே இல்லை. ஏன் மக்களைப் பற்றி கவலைப்பட துளியும் நேரமில்லை, எப்போது மோடி-அமித்ஷா புயூஸை பிடுங்குவார்கள், எப்போது ஆட்சிகவிழும் என்ற பயத்திலேயே நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கிறார்கள் இந்த இரட்டை குழல் ஆட்சியாளர்கள்.
இப்போது நாம் இங்கே கூட்டப்போகும் ஏழரை என்னவென்றால்,
தமிழ்நாடு என நமது மாநிலத்திற்கு பெயர் வைத்து 50 வருடங்கள் நிறைவு செய்ததைக் கொண்டாடும் வகையில், ஒவ்வொரு மாவட்டமாக, அரசு சார்பில் விழா கொண்டாடப் போகிறார்களாம். போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதியத்தைக் கொடுக்க பணமில்லை, சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்ய பணமில்லை, சாலைப்போட பணமில்லை, வாங்கிய கடனுக்கு வட்டிகட்ட பணமில்லை, ஆனால், மாவட்டம் மாவட்டமாக விழா கொண்டாட மட்டும் பணம் எங்கிருந்து வருகிறது, எடப்பாடி பழனிசாமி-பன்னீர்செல்வம் அவர்களே. நீங்கள், தமிழக முதல்வரா? இல்லை விழா கமிட்டி தலைவரா?
இம்சைஅரசன் வடிவேலுவின் திரைப்படத்தில் வரும் அரசவைக் கவிகள் சொல்வதைப் போல செல்வதென்றால், இன்று முதல் நீங்கள் தமிழக முதலவர் என்று அழைக்கப்படாமல்,– விழா கமிட்டி தலைவர் என்றே அழைக்கப்படுவாய்…