Wednesday, December 25, 2024
Home > #காதல் (Page 13)

என்ன தெரியும் எனக்கு… – #கவிதை

உன்னைப் பற்றி என்னத் தெரியும் எனக்கு... என்று நீ கேட்கிறாய்... உன் கேள்வியில் உண்மை உள்ளதடி என் கண்ணே... உன் பெயரைத் தவிர என்னத் தெரியும் எனக்கு? உன் பிறந்த நாளும் தெரியாது... நீ பிறந்த ஊரும் தெரியாது... உன் பெற்றவர் பெயரும் தெரியாது... உன்னுடம் பிறந்தவன் பெயரும் தெரியாது... உன் முகவரியும் எனக்குத் தெரியாது... நீ என்ன சாதி என்றும் தெரியாது... உன் வீடு சொந்த வீடா என்பதும் தெரியாது... உன் சொத்துபத்தும் எனக்குத் தெரியாது... உன் தாய்மொழி என்னவென்றும் தெரியாது... உன் குடும்பம் எப்படிப்பட்டது என்பதும்

Read More

ஏன் உன் மேல் இந்தக் காதல்… – #கவிதை

அன்று தான் முதன் முதலில் அந்த எண்ணம் தோன்றியது என் உள்ளத்தில் மின்னலைப் போல... என் மனமும் அந்த எண்ணத்தை சரியெனச் சொன்னது... அடுத்த சில தினங்களில் வந்தது... காதலர் தினம்... அன்றே சொல்லிவிட்டே உன்னிடம்... என் காதலை... உன் முடிவையும் சொல்லிவிட்டாய்... உன் மறுப்பையும் பதிவுசெய்துவிட்டாய்... என்னிடம்...   மூன்று வருடம் பழக்கம் நமக்கு... நான் தேடிச்சென்றவளும் என்னைக் கைவிட்டாள்... என்னை நாடி வந்தவளும் என்னை உதறிவிட்டாள்... இவை எல்லாம் தெரியும் தானே உனக்கு... அப்போதும் கூட நான் உன்னிடம் அறுதல் தேடவில்லையே... என் கண்ணே... உன்னுடன் எனக்குத் தனிமையில் கிடைக்காத நாட்களா? அதில்

Read More

ஒண்ணுமில்ல… பகுதி 10

ஒன்பதாவது பகுதியின் லிங்க்... மீண்டும் ஒரு ரயில் நிலையத்தில் இரயில் நின்றது. நான் அவளைப் பார்க்கிறேனா என்று ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு அந்த ரயில் நிலையத்திலே அவள் இறங்கினாள். நானும் அங்கேயே இறங்கிவிடலாம் என்று யோசித்து முடிப்பதற்குள் இரயில் கிளம்பியது. நானும் அவளையே பார்த்துக்கொண்டிந்தேன். இரயிலை விட்டு கீழே இறங்கிய பின், கூட்டத்தில் வந்ததால் களைந்திருந்த தன் உடையை சரி செய்துக் கொண்டாள். நான் அவளைப் பார்க்கிறேனா என்று மீண்டும் ஒரு முறை என்னைத்

Read More

ஒண்ணுமில்ல… பகுதி 09

எட்டாவது பகுதியின் லிங்க்... இனி மும்பையை சுற்றிப் பார்க்க கிளம்ப வேண்டியது தான் என்ற சந்தோஷத்தில் அவசர அவசரமாக ஓட்டலுக்கு வந்து, உடை மாற்றிக் கொண்டு, ஓட்டல் பஃபேவில் சாப்பிட்டுவிட்டு கிளம்பினேன். கிளம்பும் முன் மணியைப் பார்த்தேன், மணி 8.00 என்று காட்டியது. “முதலில் லோக்கல் டிரைன்ல போயி பழகிக்கோங்க. அப்ப தான் மும்பை உங்களுக்கு ஈஸியா இருக்கும்”  என்று அந்த பெரியவர் ராமசாமி சொன்னது நினைவிற்கு வந்தது. நேராக மலாட் கிழக்கு புறநகர் ரயில்

Read More

ஒண்ணுமில்ல… பகுதி 08

எழாவது பகுதியில் லிங்க் பதற்றத்தில், “ஒண்ணுமில்லை” என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து நகர முயன்றேன். ஒண்ணுமில்லைனு சொன்னதற்கு அந்தப் பெரியவர், “தம்பி. நீங்க தமிழா” என்று கேட்டு எழுந்து என் அருகில் வந்து அவர் கடைக்கு அருகில் இருந்த மர பெஞ்சில் என்னை அமர வைத்தார். முதன் முறையாக முப்பை வந்தப்பிறகு ஒரு அந்நியர் என்னிடம் தமிழிலில் பேசுகிறார். அவர் என்னிடம் தமிழில் பேச பேச எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. மும்பையுடனான எனது நெருக்கம் அந்த

Read More