Monday, December 23, 2024
Home > #சமூகம் (Page 2)

ஸ்பெஷல் காதல்…

ஸ்பெஷல் காதல்... மாற்று மாப்பிள்ளை... குருடர்களை பற்றிய ஒரு கதை இருக்கிறது. நான்கு குருடர்கள் நண்பர்களாக இருக்கிறார்கள், ஒரு நாள் குளத்திற்கு குளிக்கச் செல்லும் வழியில் ஒரு யானையும், யானைப் பாகனும் எதிரே வருகிறார்கள். குருடர்கள் நால்வரும் யானைக்கு மிக அருகில் வந்த பொழுது, யானை வருகிறது சற்று தள்ளி போகுமாறு பாகன் அவர்களை அதட்டுகிறான். இதுவரை யானைகளைப் பற்றிய கதைகளை காதால் மட்டுமே கேட்ட குருடர்கள், யானை எப்படி இருக்கும்

Read More

அருவியின் சாரல்…

அருவியின் சாரல்... 2017ஆம் ஆண்டின் சிறந்த தமிழ்படங்கள் எவை? என்று பட்டியலிட்டால் நிச்சயம் அருவி திரைப்படமும் அதில் இடம்பெறும். படத்தின் கரு, அருவியாக நடித்த அதிதி பாலன், திரைக்கதை, ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் மனிதம் அடிப்பட்டு போவது பற்றிய காட்சிகள், குழந்தைப் பருவத்தின் அழகியலை காட்டிய விதம், இயக்கம், இசை, ஒளிப்பதிவு என பாராட்ட நிறைய அம்சங்கள் இருக்கின்றன. அருவி திரைப்படத்தைப் பற்றி ஏராளமான விமர்சனங்களும், பாராட்டுக்களும் வந்துவிட்டது. ஆகவே, படத்தில் என்னை கவர்ந்த

Read More

இறுக்கி அனைச்சு ஒரு உம்ம தரும் – #பயண அனுபவம் – 8

தலைப்பு சொல்வதைப் போல, இப்பதிவு முத்தம் சம்பந்தப்பட்டது தான். பாண்டிச்சேரி சென்றிருந்த பொழுது நடந்த ஒரு சம்பவமே இப்பதிவு எழுதக் காரணம். பொது தளத்தில் இருவர் முத்தம் கொடுத்துக் கொண்டிருப்பததை என் சம காலச் சமூகம் எப்படிப் பார்க்கிறது என்பதனை பதிவு செய்ய விரும்புகிறேன். சமூகத்தில் எல்லோரும் இப்படித் தான் இருக்கிறார்கள் என்று சொல்லவில்லை, ஆனால் சமூகத்தை குறுக்கு வெட்டாக ஒரு மாதிரியை எடுத்துப் பார்த்தோம் என்றால் இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்பது விளங்கும். நம்

Read More

அடுத்த மாப்பிள்ளை நாங்க… பொண்ணு இருந்த தாங்க… – #கேள்விபதில் – 19

நண்பர்களுடன் (ஆண் நண்பர்கள் மட்டும்) பாண்டிச்சேரிக்கு பயணம் மேற்கொண்டிருந்தேன். அங்கே என் நண்பர்கள் குழுவினருடன்  பேசிக் கொண்டிருந்த பொழுது நான் அனைவரிடமும் ஒரு கேள்வியை முன் வைத்தேன். அந்தக் கேள்விக்கு அவர்கள் சொன்ன பதிலே இப்பதிவை எழுதத் தூண்டியது. பெயர்களும், நிகழ்வுகளும், ஊர்களும் நாகரிகம் கருதி மாற்றப்பட்டுள்ளது. மேலும் இது அவர்களைப் புண் படுத்த எழுதப்பட்ட பதிவல்ல, மாறாக இத்தளத்தை வாசிக்கும் வாசகிகளுக்காக எழுதப்பட்டது. நான் கேட்ட கேள்வி இதோ... கேள்வி: எந்த மாதிரியான

Read More

அவள் என்னைப் பார்த்துச் சிரித்தாள்!!! – பயண அனுபவம்-2

நாமக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சிக்குச் செல்ல அரசாங்க பேருந்திற்காக காத்திருந்தேன். அதற்கு முன்னே, இரண்டு தனியார் பேருந்துகள் அடுத்தடுத்து திருச்சிக்குச் செல்ல காத்திருந்தன. முதல் பேருந்தின் அருகே நின்றுக் கொண்டு, என் கைபேசியில் அடுத்து என்ன பாடல் கேட்கலாம் என நொண்டிக் கொண்டிருந்தேன். அப்போது அந்தப் பேருந்தின் நடத்துனர், “திருச்சி… திருச்சி…” “திருச்சி…” “திருச்சி.. திருச்சி…” என ரைமிங்காக டையமிங்காக கத்திக் கொண்டிருந்தார். அதாவது அவரது வேலையை பார்த்துக் கொண்டிருந்தார். அருகில் இருந்த என்னைப் பார்த்து,

Read More