Monday, December 23, 2024
Home > #பெண் (Page 2)

நான் கேட்ட சத்தம் – #சிறுகதை

“அபி... அபி...” யாரோ என்னை அழைக்கும் குரல் கேட்டது. சட்டென்று திரும்பிப் பார்த்தேன். “இங்க வாம்மா” என்று நான் வந்திருந்த சூர்யா மருத்துவமனை செவிலியர் என்னை அழைத்தார். “எவ்வளவு நாள் டேட் தள்ளி போயிருக்கு” “15 நாள்” “டெஸ்ட் எடுத்துப் பாத்தீங்களா” “ஆமா சிஸ்டர்” “எதுக்கும் இங்க வந்து பிளட் டெஸ்ட் எடுத்துப்பாக்கலாம்-னு வந்தேன் சிஸ்டர்” “அது மேடம் சொல்லுவாங்க” “சரிங்க சிஸ்டர்” “இந்தாங்க. போயி டெஸ்ட் எடுத்துட்டுவாங்க” என்று சிஸ்டர் ஒரு சீட்டை கொடுத்தார். அதில் சிறுநீர் கார்ப்ப பரிசோதனை செய்து, முடிவுகளை கொண்டு

Read More

எனக்காக திறந்த கதவுகள்… – #சிறுகதை

இரயில் தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்தது... நான் இன்னும் 40 படிக்கட்டுகள் இறங்க வேண்டியிருந்தது... விமானத்திற்கு இன்னும் ஒன்றே முக்கால் மணி நேரமே இருந்தது... இந்த இரயிலை விட்டால் அடுத்த இரயிலுக்கு இன்னும் 14 நிமிடம் காத்திருக்க வேண்டியிருந்தது... மூச்சறக்க ஓடோடி வந்தேன். கதை நடந்த இடம் : சென்னை மெட்ரோ இரயில் நிலையம். நேரம் : ஒர் ஞாயிறு காலை 07:45 மணி விமான நேரம் : காலை 9:30 சென்னை - மும்பை இண்டிகோ விமானம் இனி நடந்தது... மும்பை செல்லும்

Read More

பிரா-பளம் (Bra-blom) – #சிறுகதை

இன்று(01-08-21) ஞாயிற்றுகிழமை காலை 10.04 மணி. வழக்கம்போல கறி எடுத்துவிட்டு வந்து அமர்ந்திருந்தேன். என் மொபைலில் ஒரு அறிவிப்பு காட்டியது. (அட தங்கீலிஷ் மக்கா அது Mobile Notification தான்) என்னவாக இருக்கும் என்று பார்த்தேன். ஏதோ இன்று நண்பர்கள் தினமாம். அதற்காக எல்லோரும் வாழ்த்துச்செய்தி அனுப்பிக்கொண்டிருந்தார்கள். அப்படி வாட்ஸ்ஆப்பில் வந்த ஒரு செய்திக்கான அறிவிப்பை தான் நான் பார்த்தேன். வீட்டில் அம்மா சமையல் செய்து முடிக்க இன்னும் நேரமாகும்

Read More

எல்லாம் உன் நினைவாக – #கவிதை

பெண்ணே... உன் முடிவுகளை கேள்வி எழுப்பும் அதிகாரம் எனக்கில்லை... அதை தெரிந்துக்கொண்டிருக்க அப்போது எனக்கு புத்தியில்லை... அது கொடுத்த, கசப்புகளால், நீ என்னை விட்டு போகாத தூரமில்லை... இப்போது பழையதெல்லாம் பேசி ஒரு பயணுமில்லை...   உன் வாழ்க்கைப் புத்தகத்தில் நான் ஒரு பக்கம் தான்... என் நினைவுகள் உனக்கு தருவதெல்லாம் வெறும் துக்கம் தான்... என்னைப் பிரிந்ததே உனக்கு வெற்றிகரமான ஒரு துவக்கம் தான்... என்னால் இனி உன் வாழ்வில் இல்லவேயில்லை முடக்கம் தான்... உன் நினைவுகள் எழுப்பும் அலையோசையில் எனக்கில்லை உறக்கம் தான்... என்னை மூழ்கடிக்கும் அந்த நினைவுகள் தரும் வலியெல்லாம் வெறும் தொடக்கம் தான்...   என்னுள், இன்னும் நீ

Read More

வருவாளா…? என் மனைவியாக அவள்…??? – #கவிதை

பட்டாம்பூச்சியாய் வந்தாள்... தேநீயாய் அங்குமிங்கும் சுற்றினாள்... தெரிந்தவர்களுடன் பேசினாள்... எனோ என்னைப் பார்த்து சிரித்தவள்... என்னருகில் வந்தாள்... வண்டியிலே சாய்ந்துக்கொண்டாள்... என்னருகில் நின்றவரிடம் பேசினாள்....   அவள் முகத்தைக் கூட பார்க்கவில்லை நான்... யாரென்றே தெரியாத, அவள் மீது கொண்ட வெட்கத்தால்...   பேச்சுவாக்கில் அவ்வப்போது அவரை சீண்டினாள்... சீண்டலில், என்னையும் துணைக்கு அழைத்துக்கொண்டாள்... செய்வதறியாது, நான் நெளிய... அவளை ஒரக்கண்ணால் பார்க்க... அதனை அவள் பார்க்க... ஒன்றும் நடக்காததைப் போல நான் நெளிய... அதை அவள் கண்டுகொள்ள... நான் மாட்டிக்கொண்டு விழிக்க... அவன் என்னைப் பார்த்து... மீண்டும் சிரித்தாள்...   என் பார்வை மங்கியது... அவளைத் தவிர ஏதும் கண்ணுக்குத் தெரியவில்லை... அவள்

Read More