Tuesday, December 24, 2024
Home > #கவிதை (Page 3)

அது காதலாய்… – #கவிதை

பெண்ணின் புன்னகை கிளர்ச்சியைத் தூண்டும்... அதனை உணர நல்ல பயிற்சி வேண்டும்... அந்தப் பயிற்சி நல்ல முயற்சியை தூண்டும்... முயற்சியே காதலை வெளிக்காட்ட உதவும்... வெளிக்காட்டிய காதலில் தான் அன்பே பிறக்கும்... அன்பின் பிறப்பில் காதல் துவங்கும்... காதல் துவங்கியபின்னே புரிதல் துவங்கும்... புரிதல் திருமணமென்னும் புதயலைக் கொடுக்கும்... தீயவனுக்கும், கயவனுக்கும் அது கசக்கும்... நல்லவனுக்கும் வல்லவனுக்கும் அது இனிக்கும்... ஆம்... இனிக்கும்... கடைசிவரை... அது காதலாய்... – உ.கா. அணுஅணுவாய் நினைவிருப்பாய்… என் நினைவிருக்கும் வரை… ஜூலை 28, 2020 மாலை 04.30 மணி…  

Read More

என்னைப் பிரிவதில் – #குட்டிக்கவிதை

வென்றுவிட்டாய்... நீ... என்னைப் பிரிவதில்... ஆனால்... தோற்றுவிட்டாய்... நீ... என் மனதிலிருக்கும் உன் நினைவுகளை அழிப்பதில்... – உ.கா. அணுஅணுவாய் நினைவிருப்பாய்… என் நினைவிருக்கும் வரை… ஆகஸ்டு 29, 2020 காலை 10.42 மணி…

Read More

காதலில்லாமல் உலகமேயில்லை… – #கவிதை

ஒன்று சேர வேண்டி மட்டுமே வருவதல்லவே காதல்... பிரிந்தே போனாலும் தோற்காதே இந்தக் காதல்... எவ்வளவு சண்டைகள் வந்தாலும் மறக்கடிக்கும் இந்தக் காதல்... முறிந்தே போனாலும், நினைத்து நினைத்து புன்னகைக்க வைக்குமே காதல்... சேர்ந்திருந்தால், உலகே நம் காலடியில் என நினைக்கத் தூண்டுமே இந்தக் காதல்... சேராதிருப்பின்னும், அது நன்மைக்கே என புரியவைக்கும் நல்ல காதல்... கேள்விக்குள்ளான வாழ்விலும் கூட ஒளிவீசுமே காதல்... தோற்றால், உலகையே இருட்டாகும் இந்தக் காதல்... மரணத்தின் நுழைவுவாயிலை கூட, முத்தமிட துணியவைக்கும் இந்தக் காதல்... ஏனென்று தெரியாமலே, வரும் இந்தக் காதல்... யாரிடமும் சொல்லாமலேயே போய்விடுமே இந்தக் காதல்... மீண்டும் மீண்டும் யார் மேலாவது பிறக்குமே இந்தக்

Read More

குறியறுத்து வாரீர் – #கவிதை

இந்நேரம்... விந்து தள்ளும் குறியாய் இருந்திருந்தால்... அறுத்தெரிந்திருப்பேன்... இறைவன்... எனக்கு யோனியைப் படைத்துவிட்டான்... நெஞ்சில் மயிறு மட்டுமிருந்தால் இந்நேரம் அறுத்தெரிந்திருப்பேன்... இறைவன்... எனக்கு பால் சுரக்கும் முலையைப் படைத்துவிட்டான்...   என் யோனியினுள்... நாற்றமெடுக்கும் விந்தினை நுழைக்கத்தான்... எத்தனை எத்தனை குறிகள் அலைகின்றன...   என் முலையை கசக்கிப்பிழிய... பண்டமென நினைத்து அதனைச் சுவைக்க... எத்தனை எத்தனை உதடுகள் காத்திருக்கின்றன...   என் குறியினை துணைக்கு அழைக்காமல்... திட்டக்கூட... யோக்கியதையில்லாத... ஆணினமே... இதோ என் அறைக்கூவல்... இந்தப் பொட்டை காத்திருக்கிறாள்... குறியறுத்துவரும் ஆடவனுக்காக... வீரமுள்ள ஆண் மக்களே... தீராணியிருந்தால்... தைரியமிருந்தால்... குறியறுத்து வாரீர்.. என் மனதை தருகிறேன்... வருவீரா??? – உ.கா. அணுஅணுவாய் நினைவிருப்பாய்… என் நினைவிருக்கும் வரை… ஜூலை 29, 2020 மதியம் 01:30 மணி…

Read More

வாழ்நாள் காதலாய்… – #கவிதை

இவ்வுலகைவிட்டுப் பிரிந்துவிட்டாய்... என்னை தவிக்கவிட்டுச் சென்றுவிட்டாய்... உன் மேல் சத்தியம் செய்துவிட்டேன்... உன்னிடம் வாக்கு ஒன்றைக் கொடுத்துவிட்டேன்... இல்லாதிருந்தால்... நீ போன இடத்திற்கே... உன்னுடனே வந்திருப்பேன்... உன் முகத்தை மறக்கவே நினைக்கிறேன்... ஒவ்வொரு நாளும்... ஆனால்... உன் நினைவில்லாமல் கழிய மறுக்கிறது... ஒவ்வொரு நொடியும்...   உன்னை நினைக்காத நாளில்லை... நீயில்லாமல் நான் நானாகயில்லை... அன்று உன் உடலிலே உயிரில்லை... எனக்கு அன்று முதல், ஏனோ நிம்மதியில்லை... நீயில்லாத உலகில் வாழ என்னால் ஏனோ முடியவில்லை... நீ மறைந்தபின்னே எதிலும் ஏனோ எனக்கு நாட்டமில்லை... மரணத்தை எதிர்ப்பார்த்து காத்திருக்காத நாளுமில்லை... ஆனால்... கடவுளுக்கு அதனைக் கொடுக்க ஏனோ மனமில்லை... இப்பிரிவை ஏற்றுக்கொள்ள ஏனோ எனக்கு சக்தியில்லை... உன்னைப் பிரிந்த எனக்கு

Read More