Tuesday, December 24, 2024
Home > #பெண் (Page 3)

அடியே பொண்டாட்டி… – #கவிதை

அடியே பொண்டாட்டி... நீயே என் வழிகாட்டி... நீயே என் நாட்காட்டி.... நீயே என் திசைக்காட்டி... நீயே என் வாழ்வின் படகோட்டி...   அடியே பொண்டாட்டி.... இனி போட மாட்டேன் உன்னுடன் போட்டி... என் இதயம் இனி பனிக்கட்டி... நீ அதை உருக்கும் தீச்சட்டி... நீ என்னை அடக்கும் பாம்பாட்டி... நம் பிள்ளைகளின் முலையூட்டி...   அடியே பெண்டாட்டி... ஆட மாட்டேன் வாலாட்டி... இனி உன்னை மிரட்டி... நினைக்க மாட்டேன் வைப்பாட்டி... துரத்த மாட்டேன் உன்னைவிரட்டி...   அடியே பொண்டாட்டி... உன் காலில் போட்டேன் நான் மெட்டி... உன் நெற்றியிலே குங்குமம் சூட்டி... உன் தலையிலே பூச்சூட்டி... ஒட்டுமொத்த ஊரைக்கூட்டி.... கொண்டாடினேன் அதையொட்டி... திருமணமொன்னும் நிகழ்வொட்டி...   அடியே பொண்டாட்டி... நீயே

Read More

காதல் என்னும் பேரலை – #கவிதை

புன்னகை உணர்ச்சியைத் திறக்கும்... உணர்ச்சி காதலைத் திறக்கும்... காதல் முத்தத்தைத் திறக்கும்... முத்தம் காமத்தைத் திறக்கும்... காமம் கூடலைத் திறக்கும்... கூடல் உச்சத்தைத் திறக்கும்... உச்சம் மனநிம்மதியைத் திறக்கும்... நிம்மதி நல் வாழ்க்கையைத் திறக்கும்... வாழ்க்கை உலகத்தை திறக்கும்... உலகம் நம் அறிவை திறக்கும்... அறிவு பொருளைத் திறக்கும்... பொருள் மேண்மையைத் திறக்கும்... மேண்மையே புன்னகயைத் திறக்கும்... பெண்ணின் புன்னகையே... இங்கே காதலின் திறவுகோல்...   காதல் என்றென்றும் புரிந்துக்கொள்ளவே முடியாத ஒரு புன்னகை... புரிந்துக்கொண்டால்... அது நினைவே கொள்ள முடியாத ஒர் நினைவலை... அதுவே காதல் என்னும் பேரலை... – உ.கா. அணுஅணுவாய் நினைவிருப்பாய்… என் நினைவிருக்கும் வரை… ஜூலை 28,

Read More

என்னைப் பிரிவதில் – #குட்டிக்கவிதை

வென்றுவிட்டாய்... நீ... என்னைப் பிரிவதில்... ஆனால்... தோற்றுவிட்டாய்... நீ... என் மனதிலிருக்கும் உன் நினைவுகளை அழிப்பதில்... – உ.கா. அணுஅணுவாய் நினைவிருப்பாய்… என் நினைவிருக்கும் வரை… ஆகஸ்டு 29, 2020 காலை 10.42 மணி…

Read More

காதலில்லாமல் உலகமேயில்லை… – #கவிதை

ஒன்று சேர வேண்டி மட்டுமே வருவதல்லவே காதல்... பிரிந்தே போனாலும் தோற்காதே இந்தக் காதல்... எவ்வளவு சண்டைகள் வந்தாலும் மறக்கடிக்கும் இந்தக் காதல்... முறிந்தே போனாலும், நினைத்து நினைத்து புன்னகைக்க வைக்குமே காதல்... சேர்ந்திருந்தால், உலகே நம் காலடியில் என நினைக்கத் தூண்டுமே இந்தக் காதல்... சேராதிருப்பின்னும், அது நன்மைக்கே என புரியவைக்கும் நல்ல காதல்... கேள்விக்குள்ளான வாழ்விலும் கூட ஒளிவீசுமே காதல்... தோற்றால், உலகையே இருட்டாகும் இந்தக் காதல்... மரணத்தின் நுழைவுவாயிலை கூட, முத்தமிட துணியவைக்கும் இந்தக் காதல்... ஏனென்று தெரியாமலே, வரும் இந்தக் காதல்... யாரிடமும் சொல்லாமலேயே போய்விடுமே இந்தக் காதல்... மீண்டும் மீண்டும் யார் மேலாவது பிறக்குமே இந்தக்

Read More

குறியறுத்து வாரீர் – #கவிதை

இந்நேரம்... விந்து தள்ளும் குறியாய் இருந்திருந்தால்... அறுத்தெரிந்திருப்பேன்... இறைவன்... எனக்கு யோனியைப் படைத்துவிட்டான்... நெஞ்சில் மயிறு மட்டுமிருந்தால் இந்நேரம் அறுத்தெரிந்திருப்பேன்... இறைவன்... எனக்கு பால் சுரக்கும் முலையைப் படைத்துவிட்டான்...   என் யோனியினுள்... நாற்றமெடுக்கும் விந்தினை நுழைக்கத்தான்... எத்தனை எத்தனை குறிகள் அலைகின்றன...   என் முலையை கசக்கிப்பிழிய... பண்டமென நினைத்து அதனைச் சுவைக்க... எத்தனை எத்தனை உதடுகள் காத்திருக்கின்றன...   என் குறியினை துணைக்கு அழைக்காமல்... திட்டக்கூட... யோக்கியதையில்லாத... ஆணினமே... இதோ என் அறைக்கூவல்... இந்தப் பொட்டை காத்திருக்கிறாள்... குறியறுத்துவரும் ஆடவனுக்காக... வீரமுள்ள ஆண் மக்களே... தீராணியிருந்தால்... தைரியமிருந்தால்... குறியறுத்து வாரீர்.. என் மனதை தருகிறேன்... வருவீரா??? – உ.கா. அணுஅணுவாய் நினைவிருப்பாய்… என் நினைவிருக்கும் வரை… ஜூலை 29, 2020 மதியம் 01:30 மணி…

Read More