ஜாதிகளால் ஜோதியானது… நம் காதலும்… -#கவிதை
நம் காதலுக்கு எமனாய் வந்தது ஜாதி... வெல்ல முடியவில்லை, நாம் அதனுடம் மோதி... ஜாதியை இங்கே ஆக்கிவிட்டார்கள், காதலுக்கான தகுதி... வென்று கரம்பிடிக்க எண்ணினேன் மதியால்... துவளாமல் போராடியும் துவண்டுக்கிடக்கிறேன் விதியால்... இருமனம் திருமணத்தில் சேர, எவனெவனோ தரவேண்டியிருக்கிறது அனுமதி... நம்மைப் பிரித்தால் ஏன் அவனுக்கு கிடைக்கிறது வெகுமதி... உலகிற்குச் சொல்கிறார்கள், நம் பிரிவை வைத்து, ஒரு சேதி... சமூகம் ஏனோ கடைப்பிடிக்கிறது, அநீதியைக்கண்டும், அமைதி... நம் காதலும் கரைந்துப்போனது... நம் மனமும் நிம்மதியிழந்துப்போனது... இந்த ஜாதிகளால்... ஜோதியானது... நம் காதலும்... – உ.கா. அணுஅணுவாய் நினைவிருப்பாய்… என் நினைவிருக்கும் வரை… மே
Read More