Wednesday, December 25, 2024
Home > #கவிதை (Page 6)

அது தான் காதல் – #கவிதை

கெஞ்சினாலும் வராது... கொஞ்சினாலும் வராது... மிரட்டினாலும் வராது... மயக்கத்தினாலும் வராது... கத்தினாலும் வராது... கதறினாலும் வராது... பேசினாலும் வராது... பேசாவிடினும் வராது... பார்த்தாலும் வராது... பார்த்துக்கொண்டேயிருந்தாலும் வராது... பார்க்காவிட்டாலும் வராது... அது... வருவதும் தெரியாது... அது... வந்ததுக் கூட தெரியாது... அது... வருவதைத் தடுக்கவும் முடியாது... அது... வருவதைத் தவிர்க்கவும் முடியாது... அது... போவதையும் தடுக்க முடியாது... அது... போனால் போனது தான்... அதனைக் காக்கவும் முடியாது... அதனைக் காப்பாற்றவும் முடியாது... அது... சொல்லிவிட்டும் போகாது... அது... சொல்லிவிட்டும் வராது... அது தான் காதல்... – உ.கா. அணுஅணுவாய் நினைவிருப்பாய்… என் நினைவிருக்கும் வரை… மார்ச் 07, 2020 காலை 09.48 மணி…

Read More

அழைத்துவிடாதே… உன் திருமணத்திற்கு… – #கவிதை

தினமும் கனவொன்று காண்கிறேன்... அந்தக் கனவிலே... என் கையில்... நமது செல்லப் பெண் குழந்தையிருக்கிறது... உன்னை மருத்துவமனையினுள் அழைத்துச் செல்கின்றனர்... இரண்டாவது பிரசவத்திற்கு... என் முகமெல்லாம் கவலை ரேகைகள்... சில நிமிடங்களில்... கையில் தவிழும் ஆண் குழந்தையுடன்... வருகிறாள் ஒரு செவிலியர்... நம் மகன்... உன்னைப் பார்க்க என்னை உள்ளே அனுமதிக்கிறார்கள்... நீ பிரசவம் முடிந்து உறங்கிக் கொண்டிருக்கிறாய்... என் கண்ணே... உன் உச்சந்தலையில் முத்தமொன்று தருகிறேன்... அந்த நொடியில்... விழித்துக்கொள்கிறேன்... நான்... தினமும் இதே இடத்தில்... தினம் தினம் இதே கனவு என்னை எழுப்பிவிட்டு விடுகிறது... ஆழ்ந்த உறக்கத்திலிருந்து... கனவுலகிலே... உன்னை என் பொண்டாட்டியாய் நினைத்து வாழ்ந்துவிட்டேன்... குடும்பமே நமக்கு இருக்கிறது

Read More

அடியே நான் என்ன செய்ய – #குட்டிகவிதை

நீ என்னை மறுக்க மறுக்க... எனக்கு இன்னும் இன்னும் உன்னைப் பிடிக்கிறதே... என்ன செய்ய... அடியே நான் என்ன செய்ய... – உ.கா. அணுஅணுவாய் நினைவிருப்பாய்… என் நினைவிருக்கும் வரை… பிப்ரவரி 25, 2020 மாலை 07.30 மணி…

Read More

ஏன் பிடிக்கிறது உன்னை… -#கவிதை

ஏன் உன்னைப் பிடித்திருக்கிறது எனக் கேட்கிறாய்? எனக்கே இந்தக் கேள்விக்கு பதில் தெரியாதபொழுது... நான் எப்படியடி சொல்வேன் உனக்கு பதிலை... உனக்காக முயற்சி செய்கிறேன்... கேட்டுக்கொள்ளடி என் கண்ணே...   உன் கண்கள் எனக்குப் பிடிக்கும்... சிரிக்காமல் சிரிக்கும் உன் உதடுகள் எனக்குப் பிடிக்கும்... உனது புருவத்தின் அழகு பிடிக்கும்... ஏதேனும் கேள்வி கேட்கையில் உயரும் அந்தப் புருவம் இன்னும் பிடிக்கும்... உன் மேலே நீ வரைந்துக் கொள்ளும் கோளங்கள் பிடிக்கும்... உன் பெயரை உன் கையில் எழுதி வைத்திருப்பது பிடிக்கும்... நான் கண்டுவிட்டால், அதனை நீ

Read More

காதல், நம் மனதிலாவது வாழட்டும்… – #கவிதை

பார்க்க வந்திருக்கும் மாப்பிள்ளையை பிடிக்கவேயில்லை என்று என்னிடம் சொல்கிறாய்... உன் குடும்பத்திற்காக அவனை மணமுடிக்க சம்மதித்துவிட்டாய்... என்னை மட்டும் ஏனோ அடிக்கடி நினைக்கிறாய்... என்னைப் பிடித்திருந்தும் பிடிக்கவில்லை என்கிறாய்... ஏனோ, என் மேல் கொள்ளைக் கோபத்தில் இருக்கிறாய்... தாமதமாக என் காதலை உன்னிடம் சொன்னேன் என்ற கோபமா? இல்லை... ஏன் காதலை உன்னிடம் சொன்னேன் என்ற கோபமா? காதல்... இப்போது காலம் கடந்துவிட்டது... வாய்ப்புகளின் நேரம் முடிந்துவிட்டது... நான் ஆகியிருக்க வேண்டும் உந்தன் கணவனாய்... நீ ஆகியிருக்க வேண்டும் எந்தன் மனைவியாய்... நாம் என்றும் சேர்ந்திருந்திருக்க வேண்டும் நல்லதொரு குடும்பமாய்... வாழ்க்கையையே கொண்டாடியிருப்போம் நாம்

Read More