Wednesday, December 25, 2024
Home > #பெண் (Page 6)

தினமும் காதலில்…

என் உறவே... நிலவின் அழகே... என்னுயிரின் கருவே... நிலவைப் போல என்னருகில் வருகிறாய்... என்னைக் கண்டதும் பெளர்ணமியாய் மிளிர்கிறாய்... நானில்லா நாட்களில் அமாவாசையாய் இருண்டுப்போகிறாய்...   வியக்கிறேனடி... உன் சூரியனா??? நான் என்று.... அருகில் வர வர மிளிர்கிறாய்... விலக விலக இருள்கிறாய்... உணர்கிறேனடி நான்... எந்தன் நிலவு நீயடி என்று...   நாம் படும்பாடு... எல்லாம் காதலில் வெளிப்பாடு... உந்தன் சூரியனாய் நான் வருவேன்... எந்தன் நிலவாய் நீ வருவாய்... அதுவரை காத்திரு பெண்ணே... அமாவாசையில் ஊடலும்... பெளர்ணமியில் கூடலும்... கொள்வோமடி...   காதலே நம் சக்தி... சீக்கிரம் வகுக்கிறேன் ஒரு யுக்தி... அதுவரை... திளைத்திருப்போம்... தினமும் காதலில்... – உ.கா. அணுஅணுவாய் நினைவிருப்பாய்… என் நினைவிருக்கும் வரை… பிப்ரவரி 10, 2020 காலை

Read More

அவள் யாரோ…

அவள் யார் என்று தெரியாது... அங்கு, நான் தேடி வந்தவனும் கிடையாது... அவள், மாடிப்படியில் அமர்ந்திருந்தாள்... கண்களில் கண்ணீருடன்... அவளருகில் நான் சென்றேன்... என்னை கண்டுகொண்டவள், அழுதாள், இன்னும் கனமாக... என் மனம் வாடியது, இதைக் கண்டு... அவள் அருகில் சென்றமர்ந்தேன்... அழுகை வேண்டாம் பெண்ணே என்றேன்... எதற்கும் கலங்காதே... அச்சம் தவிர் பெண்ணே என்றேன்... பாரதி கண்ட புதுமைப் பெண்ணாய்... மீண்டு வா கண்ணே என்றேன்... சொல்லி முடிப்பதற்குள்... என் மடியிலே சாய்ந்து அழுதாள்... என் கண்களும் கலங்கியது... அடக்கிக்கொண்டேன் நான் கண்ணீரை... ஆறுதலாய் இருந்திருக்கும்... அது அவளுக்கு... என் மடியிலே படுத்து அழுதாள்...

Read More

தெருவோரக் காதலா…

என் தெருவோரக் காதலா... நீ தான் இனி எனக்கு உலகம்... நீ கொஞ்சம் சரிந்துதான் விட்டாய் என் கண்ணா... நீ தோற்கவில்லையே என் மன்னா... நான் இருப்பேன் இனி உன் பின்னால்... வெற்றிகள் குவியும் இனி உன் முன்னால்...   மாட மாளிகையின் நாயகன் வேண்டாம்... என் மனதை வென்ற நாயகனே நீ மட்டுமே வேண்டும்... எனக்கு... என் இணையாய்... என் உயிராய்... என் துணையாய்...   உன்னை நினைத்தாலே அது எனக்கு திருவிழா... அதில், நீ இருக்கிறாய்... தேரின் நடுவிலே... நமக்கு எப்போது நடக்கும் மணவிழா... அப்போது முதல் நீ இருப்பாய் எந்தன்

Read More

குடிசைவீட்டு காதலி…

பார்க்காதே பெண்ணே... தினமும் என்னை... என்னைப் பார்த்து தாழ்த்திக்கொள்ளாதே உன்னை... நான் தெருவோரக்காரன்... நானல்ல உனது நாயகன்...   இப்போது உனக்காவது இருக்குதம்மா குடிசை... என்னைத் தேடி வந்தால் உனக்குதனம்மா இம்சை... நஷ்டம் கண்டேன் தொழிலில்... நலிந்துவிட்டேன் உடலளவில்... மொத்தமும் இழந்துவிட்டேன் கடைசியில்... இப்போது நிற்கிறேன் நடுத்தெருவில்... கட்டிக்கொண்டவளும் வெட்டிக்கொண்டுவிட்டாள் பாதியில்... தளர்ந்துவிட்டேன் மனதளவில்... இருண்டே விட்டது உலகம் எனக்கு... நட்புக்கூட்டமும் தள்ளிவைத்தது... சொந்த பந்தமும் விட்டுச் சென்றது...   இவையெல்லாம் தெரியும் உனக்கு... இருந்தும்... என்னைப் பார்த்தால்... உன் கண்களில் தெரியுது வெட்கம்... உன் முகத்தில் தெரியுது மலர்ச்சி... உன் உதடுகளில் தெரியுது ரம்மியமான ஒரு சிரிப்பு.... இவையாவும் எனக்குக் கொடுக்குது பெரும்

Read More

வலிமையாய் நீ இருக்க…

என் ஆரூயீர் தோழியே... உன் மேல் நான் கோபம் கொண்டிருக்கிறேன்... நீ எடுக்கும் கோழைத்தனமான முடிவுகளால்... உனக்கு வரும் நல் வாய்ப்புகளை நீ வீணடிக்கிறாய்... உன்னை விட்டு விலகியவனை மறக்க மறுக்கிறாய்... அவனையே நினைத்து நினைத்து... நீ கலங்காதே... அவன் நினைவுகளால்... நீ தடுமாறாதே.... தடுமாறினால்... நீ... தடமாறிடுவாய்... சற்றே சிந்தித்துப்பார் என் அருமை தோழியே... உன் கண்ணீருக்கு அவன் ஏற்றவனா என்று... என்றும் அவசரம் வேண்டாம் தோழியே... அவனும், இனி உனக்கு வேண்டாம் தோழியே... காதல் அற்புதமான ஒரு கண்ணாடி... அது உடைந்துவிட்டால்... அது போக வேண்டும் நம் நினைவிற்கு பின்னாடி... உடைந்த கண்ணாடியை

Read More