Tuesday, December 24, 2024
Home > #ஒண்ணுமில்ல (Page 7)

ஒண்ணுமில்ல… பகுதி 12

பதினொறாவது பகுதியின் லிங்க்... என் கதை என்னவொன்று பார்க்கும் முன் என் குடும்பப் பின்னனியைப் பற்றி நீங்கள் கொஞ்சம் தெரிந்துக்கொள்ள வேண்டும். என் அப்பாவும் அம்மாவும் காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்கள். இருவரும் ஒரே அரசு வங்கி அலுவலகத்தில் கிளார்க்காக வேலைப் பார்த்தனர். அப்பாவின் பெயர் எழில். பெயருக்கு ஏற்றார் போல் அழகாக இருப்பார். என் தாத்தா ராமசாமியைப் போன்றே நல்ல வெள்ளை நிறம். அவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் மும்பையில் தான். அம்மாவின் பெயர்

Read More

ஒண்ணுமில்ல – முதல் அத்தியாயம்…

“நான் எங்கயாவது போறான். என்ன கொஞ்ச தனியா விடுங்கமா” என்று அம்மாவிடம் கத்திவிட்டு எனது சிவப்பு யமஹா ஆர்.எக்ஸ் 135ஐ எடுத்துக்கொண்டு ரெட்டப்பாலத்திற்கு செல்ல நினைத்தேன். அதற்குள், “ராஜேஸ். உன் தம்பி எங்கேயே வண்டி எடுத்துட்டுப்போறான் பாருடா” என்று அம்மா அண்ணனை அழைத்தாள். அதற்குள் நான் வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பியிருந்தேன். நேற்றும், இன்றும் என் வீட்டில் நடந்த களபேரங்களால் நான் கடுமையான மன உளைச்சலில் இருந்தேன். என் வாழ்க்கையையே புரட்டிப்போட்டுவிட்டது இந்த இரண்டு நாட்கள்.

Read More

ஒண்ணுமில்ல… பகுதி 11

பத்தாவது பகுதியின் லிங்க்... இன்றும் அதே கனவு... எழுந்து மணி பார்த்தேன். காலை 7.45 ஆகியிருந்தது. ஐயோ, நெடு நேரம் தூங்கிவிட்டேன் போல, என்று எழுந்து குளித்து ரெடியாகிவிட்டேன். நான் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட பெண். பிறந்து வளர்ந்தது, படிப்பு என எல்லாமே மும்பையில். மும்பையைத் தவிர நான் வேறு எந்த ஊருக்கும் போனதுக் கூட கிடையாது. நன்றாக படித்து இப்போது ஒரு ஐடி கம்பெனியில் சீனியர் சிஸ்டெம்ஸ் இஞ்சினியராக உள்ளேன். நல்ல

Read More

ஒண்ணுமில்ல… பகுதி 10

ஒன்பதாவது பகுதியின் லிங்க்... மீண்டும் ஒரு ரயில் நிலையத்தில் இரயில் நின்றது. நான் அவளைப் பார்க்கிறேனா என்று ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு அந்த ரயில் நிலையத்திலே அவள் இறங்கினாள். நானும் அங்கேயே இறங்கிவிடலாம் என்று யோசித்து முடிப்பதற்குள் இரயில் கிளம்பியது. நானும் அவளையே பார்த்துக்கொண்டிந்தேன். இரயிலை விட்டு கீழே இறங்கிய பின், கூட்டத்தில் வந்ததால் களைந்திருந்த தன் உடையை சரி செய்துக் கொண்டாள். நான் அவளைப் பார்க்கிறேனா என்று மீண்டும் ஒரு முறை என்னைத்

Read More

ஒண்ணுமில்ல… பகுதி 09

எட்டாவது பகுதியின் லிங்க்... இனி மும்பையை சுற்றிப் பார்க்க கிளம்ப வேண்டியது தான் என்ற சந்தோஷத்தில் அவசர அவசரமாக ஓட்டலுக்கு வந்து, உடை மாற்றிக் கொண்டு, ஓட்டல் பஃபேவில் சாப்பிட்டுவிட்டு கிளம்பினேன். கிளம்பும் முன் மணியைப் பார்த்தேன், மணி 8.00 என்று காட்டியது. “முதலில் லோக்கல் டிரைன்ல போயி பழகிக்கோங்க. அப்ப தான் மும்பை உங்களுக்கு ஈஸியா இருக்கும்”  என்று அந்த பெரியவர் ராமசாமி சொன்னது நினைவிற்கு வந்தது. நேராக மலாட் கிழக்கு புறநகர் ரயில்

Read More