Tuesday, December 24, 2024
Home > #காதல்கதை (Page 7)

ஒண்ணுமில்ல… பகுதி 14

பதிமூன்றாவது பகுதியின் லிங்க்... நான் உள்ளே சென்றதும் ஒரு ரயில் பிளாட்பாரத்திலிருந்து கிளம்பியது. வேகமாக ஓடிச்சென்று ஏறினேன். நான் ராபினை பிரிந்த பின் பெரும்பாலும் பெண்கள் பெட்டியில் தான் பயணிப்பேன். பொதுப் பெட்டியில் பயணித்தால், அவனுடன் பழகிய நாட்கள் என் நினைவிற்கு வந்து என்னை காயப்படுத்துகிறது. ஆனால் இன்று வேறு வழியில்லாமல் ஏற வேண்டியதாகிப் போனது. ஏற்கனவே நேரமாகிவிட்டதால், இதில் ஏறிக்கொண்டேன். வீட்டில் இருந்தே வேலை செய்திருக்கலாம். என் ஐடி நிறுவனத்தில் அந்த

Read More

ஒண்ணுமில்ல… பகுதி 13

பன்னிரெண்டாவது பகுதியின் லிங்க்... எனது அப்பாவும் அம்மாவும் இப்போது சில நேரங்களில் ஒரு விசயத்திற்காக ஒன்று கூடுகிறார்கள். ஆனால் அது அவர்களது அன்பு மகளுக்காக அல்ல. அவர்கள் ஒன்று கூடுவது எதற்காக என்றால் அது ஒரு சொத்திற்காக. அந்த சொத்து டி.என்.நகர் என்று அழைக்கப்படும் தாதாபாய் நோவ்ரோஜி நகரில் இருக்கிறது. அக்காலத்தில் தாத்தா பெயரில் வாங்கியது. தாத்தாவின் அப்பா ஊரிலிருந்த மிச்ச சொச்ச சொத்தை விற்றுக் கொஞ்சம் பணம் கொண்டு வந்திருந்தார். தாத்தாவிற்கும்

Read More

ஒண்ணுமில்ல… பகுதி 12

பதினொறாவது பகுதியின் லிங்க்... என் கதை என்னவொன்று பார்க்கும் முன் என் குடும்பப் பின்னனியைப் பற்றி நீங்கள் கொஞ்சம் தெரிந்துக்கொள்ள வேண்டும். என் அப்பாவும் அம்மாவும் காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்கள். இருவரும் ஒரே அரசு வங்கி அலுவலகத்தில் கிளார்க்காக வேலைப் பார்த்தனர். அப்பாவின் பெயர் எழில். பெயருக்கு ஏற்றார் போல் அழகாக இருப்பார். என் தாத்தா ராமசாமியைப் போன்றே நல்ல வெள்ளை நிறம். அவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் மும்பையில் தான். அம்மாவின் பெயர்

Read More

ஒண்ணுமில்ல – முதல் அத்தியாயம்…

“நான் எங்கயாவது போறான். என்ன கொஞ்ச தனியா விடுங்கமா” என்று அம்மாவிடம் கத்திவிட்டு எனது சிவப்பு யமஹா ஆர்.எக்ஸ் 135ஐ எடுத்துக்கொண்டு ரெட்டப்பாலத்திற்கு செல்ல நினைத்தேன். அதற்குள், “ராஜேஸ். உன் தம்பி எங்கேயே வண்டி எடுத்துட்டுப்போறான் பாருடா” என்று அம்மா அண்ணனை அழைத்தாள். அதற்குள் நான் வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பியிருந்தேன். நேற்றும், இன்றும் என் வீட்டில் நடந்த களபேரங்களால் நான் கடுமையான மன உளைச்சலில் இருந்தேன். என் வாழ்க்கையையே புரட்டிப்போட்டுவிட்டது இந்த இரண்டு நாட்கள்.

Read More

ஒண்ணுமில்ல… பகுதி 11

பத்தாவது பகுதியின் லிங்க்... இன்றும் அதே கனவு... எழுந்து மணி பார்த்தேன். காலை 7.45 ஆகியிருந்தது. ஐயோ, நெடு நேரம் தூங்கிவிட்டேன் போல, என்று எழுந்து குளித்து ரெடியாகிவிட்டேன். நான் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட பெண். பிறந்து வளர்ந்தது, படிப்பு என எல்லாமே மும்பையில். மும்பையைத் தவிர நான் வேறு எந்த ஊருக்கும் போனதுக் கூட கிடையாது. நன்றாக படித்து இப்போது ஒரு ஐடி கம்பெனியில் சீனியர் சிஸ்டெம்ஸ் இஞ்சினியராக உள்ளேன். நல்ல

Read More