Monday, December 23, 2024
Home > #ஒண்ணுமில்ல (Page 8)

ஒண்ணுமில்ல… பகுதி 08

எழாவது பகுதியில் லிங்க் பதற்றத்தில், “ஒண்ணுமில்லை” என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து நகர முயன்றேன். ஒண்ணுமில்லைனு சொன்னதற்கு அந்தப் பெரியவர், “தம்பி. நீங்க தமிழா” என்று கேட்டு எழுந்து என் அருகில் வந்து அவர் கடைக்கு அருகில் இருந்த மர பெஞ்சில் என்னை அமர வைத்தார். முதன் முறையாக முப்பை வந்தப்பிறகு ஒரு அந்நியர் என்னிடம் தமிழிலில் பேசுகிறார். அவர் என்னிடம் தமிழில் பேச பேச எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. மும்பையுடனான எனது நெருக்கம் அந்த

Read More

ஒண்ணுமில்ல… பகுதி 07

ஆறாவது பகுதியின் லிங்க்... எப்படியாவது கிடைத்த நேரத்தை சரியாக செலவிட வேண்டும் என்று தோன்றியது எனக்கு. ஏழு மணி நேரம் தனிமையில், அதுவும் மும்பைப் போன்ற பெரு நகரத்தில். நாளை முதல் வேலை, வேலை என்று கொஞ்சம் பிஸி ஆகிவிடுவேன். மும்பையை சுற்றிப்பார்க்க இது ஒரு நல்ல வாய்ப்பு. தனிமையில் பயணம் செய்வது தியானம் செய்வதற்குச் சமம். அப்போது நமக்கு ஒரு விதமான மன அமைதி கிடைக்கும். ஆனால் போகும் இடம்

Read More

ஒண்ணுமில்ல… பகுதி 06

ஐந்தாவது பகுதியின் லிங்... இதில் நான் மும்பை வந்தக் கதை சுவாரஸ்யமானது. அந்தக் கதை என்னவென்றால்... ரெட்டப்பால சம்பவத்திற்குப் பிறகு, நான் எங்காவது சென்று வந்தால் தான் சரி பட்டுவரும் என்று குமாருக்கு தோன்றியது. ஆனால், கோபியும்-தயாவும் தாங்களும் கூட வருவோம் என்று அடம் பிடிப்பார்கள் என்று குமாருக்குத் தெரியும். மும்பைக்கு போகலாம் என்று சொல்லிவிட்டு, நாம நாலு பேரும் கோவா போகலாம் என்று கோபி-தயாவிடம் குமார் சொல்ல, அவர்கள் கண்கள் விரிந்தன. அவர்களும் கனவு

Read More

ஒண்ணுமில்ல… பகுதி 05

நான்காவது பகுதியின் லிங்க்... ரெட்டப்பாலத்தில் என்னை அறைந்த பின் சிறுது நேரத்திற்கு குமார் என்னிடம் எதுவுமே பேசவில்லை. சிறிது நேரம் இருவரும் அங்கேயே அமைதியாய் எப்போதும் அமரும் இடத்தில் அமர்ந்திருந்தோம். அவன் மீண்டும் ஒரு தம்மை எடுத்து பற்ற வைத்து இழுத்தான், என்னை முறைத்துக்கொண்டே. சட்டென்று எழுந்து, வீட்டிற்குச் செல்ல வண்டியை எடுத்தான். நான் ஏதும் பேசாமல் வண்டியில் ஏறிக்கொண்டேன். ரெட்டப்பாலத்தில் நடந்ததை வீட்டில் யாரிடமும் அவன் சொல்லவில்லை. எங்கள் குழும நண்பர்கள் கோபி, தயாவிற்கு

Read More

ஒண்ணுமில்ல… பகுதி 03

இரண்டாவது பகுதியின் லிங்க் சரி வெளியில் சென்று, காபி குடிக்கலாம் என்று ஐபோனை ஏர்-பார்டையும் எடுத்துக்கொண்டு கிளம்பினேன், மராத்தி-இந்தி மொழி தெரியாத மும்பையில். ஏர்-பார்டை எடுத்து காதில் மாட்டிக்கொண்டு, ஏ.ஆர். ரகுமான் இசையில், என் மனதிற்கு பிடித்த, “ஒரு பொய்யாவது சொல் கண்ணே, உன் காதல் நான் தான் என்று” என்ற பாடலை ஒலிக்க விட்டு அறையை சாத்திவிட்டு நடக்க ஆரம்பித்தேன். நான் தங்கியிருந்தது மலாட் கிழக்கு புறநகர் இரயில் நிலையத்திற்கு அருகில். இந்தத் தெருவில்

Read More