Thursday, December 26, 2024
Home > #காதல் (Page 8)

ஒண்ணுமில்ல… பகுதி 28

இருபத்திஎழாவது பகுதியின் லிங்க்... தேவியின் நினைவிலே அன்றைய இரவு கழிந்ததில் என்னால் காலையில் எழ முடியவில்லை. மருந்துகளின் வீரியம் குறைந்து எனக்கு சற்றே வலி தெரிய ஆரம்பித்தது. சோம்பலாக எழுந்து மொபலைத் தேடினேன். வழக்கம்போல சார்ஜ் இல்லாமல் இருந்தது. சார்ஜரை எடுத்து சார்ஜ் போட்டுவிட்டு, முகம் கழுவி, காலைக்கடனை முடித்துவிட்டு, பல் துலக்கி, குளித்து தயாராகி இன்று தாஸுடன் என்று பார்க்கவேண்டிய இடங்களின் பட்டியலை எடுத்து சரிப் பார்த்துக்கொண்டேன். தாஸ் பத்து

Read More

ஒண்ணுமில்ல… பகுதி 27

இருபத்திஆறாவது பகுதியின் லிங்க்... கடைசியாக அந்த விசயத்திற்கு வந்தார் சூசன். அது என்னவென்றால், அந்த ஹெச்.ஆர் மீது பலர் புகார் தெரிவித்திருப்பதால், அவனை நிறுவனத்தை விட்டு நீக்குவது என்று மேல் மட்ட நிர்வாகம் முடிவெடுத்திருக்கிறது என்றார். மேலும், காவல்துறையில் நிர்வாகம் சார்பில் புகார் செய்யப்பட்டு, அவன் கைது செய்யப்பட்டிருக்கிறான் என்று சொன்னார். “ஹோப் ஜுஸ்டிஸ் வில் பீ செர்வுட்” என்றார். எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. “தேங்க் யூ சூசன்” என்று மட்டும் சொன்னேன். “ஐ கேனோ தட்

Read More

ஒண்ணுமில்ல… பகுதி 26

இருபத்திஐந்தாவது பகுதியின் லிங்க்... குமார் அழைக்கிறான் என்று காட்டியது என் போன். இன்று இந்த சிக்கன் ரைசஸை சாப்பிட்ட மாதிரி தான் என்று தோன்றியது. எடுத்தால் கத்துவான் என்று தெரியும். வேண்டும் என்றே இரயில் இருந்து நான் குதித்தேன் என்று சொன்னாலும் சொல்லுவான். ரெட்டபால சம்பவத்திற்குப் பிறகு நான் என்னவெல்லாம் செய்கிறேன் என்று அவன் தீவிரமாக கண்காணித்துக் கொண்டிருக்கிறான். யோசிக்காமல், காலையில் இரயில் ஒரு பெண்ணைப் பார்த்தேன். அதே பெண்ணை மறுபடியும் மதியம் இரயில்

Read More

ஒண்ணுமில்ல… பகுதி 25

இருபத்திநான்காவது பகுதியின் லிங்க்... நான் போன் அடித்த அரை மணி நேரத்தில் என் கைடு தாஸ் வந்து சேர்ந்தார். வந்தவர், என்னைப் பார்த்து பதறிவிட்டார். என்ன ஆச்சு, ஏதாச்சு, இரத்தமெல்லாம் வந்திருக்கு என்று தமிழில் தடுமாறாமல் பேசினார். நான் இரயில் படியருகே நின்றுக்கொண்டிருந்தேன். கூட்டம் அதிகமாக இருத்ததால் என்னை யாரோ தள்ளிக்கொண்டு இறங்க முயற்சி செய்ய, நான் இரயிலில் இருந்து கீழே விழுந்துவிட்டேன். இடது கையை ஊன்றியதில் மணிக்கட்டுப் பகுதியில் லேசான வலியிருக்கிறது.

Read More

ஒண்ணுமில்ல… பகுதி 24

இருபத்தி முன்றாவது பகுதியின் லிங்க்... அறைக்குள் நுழைந்தவுடன் கதவைப் பூட்டிக்கொண்டேன். ******************** என் உடலெல்லாம் நடுங்கியது. இன்றைய நாள் ஏன் எனக்கு இவ்வளவு மோசமானதாக இருக்கிறது. பெண்ணாய் பிறந்தது என் தவறா? எல்லா ஆண்களும் ஏன் பெண்ணை ஏதோ நுகரும் பண்டமாகவே பார்க்கிறார்கள். இங்கே உண்மையான அன்பு பெண்களுக்கு கிடைக்காமலே போகிறதே. என்ன உலகம் இது. இங்கே பெண் சம்மதம் சொல்லும் வரை, பெண்ணுக்காக ஒரு ஆண் தலைகீழாக நிற்கிறான், விட்டால் தண்ணீரில் கூட நடப்பான்.

Read More