Monday, December 23, 2024
Home > #காதல்கதை

தீராக் காதல் – #கவிதை

ஏழு வருட காதலையும் துச்சமென தூக்கி எறிந்தாள் அவள் தம் பெற்றோர் சம்மதம் பெறமுடியாமல்... அகமகிழ்ந்த காதலையும் வேண்டவே வேண்டாம் என்றாள் அவள் தன் மனதை கல்லாக்கி... அவள் முடிவு இதுதான் எனில் எழுவருடமாய் அவள் தன் காதலை அள்ளித்தந்தது ஏனோ...? என்னுடன் சேர வழியேயில்லாமல் என்னை காதலித்து என்னுடன் சேர அவள் நினைத்தது என் தவறா...? என் இன்பத்திலும் துன்பத்திலும் அவள் பங்கெடுத்தது என்னை அவள் மீளத்துயரில் தவிக்கவிடத்தானோ...? துன்பமென்னும் தெரிந்தும் அவள் என்னைப் பிரிந்தாள் அது ஏனோ...? அவளை மறக்க நினைக்காத நாளில்லை... முயன்று... முயன்று... முடியாமல்... அவளை

Read More

நான் கேட்ட சத்தம் – #சிறுகதை

“அபி... அபி...” யாரோ என்னை அழைக்கும் குரல் கேட்டது. சட்டென்று திரும்பிப் பார்த்தேன். “இங்க வாம்மா” என்று நான் வந்திருந்த சூர்யா மருத்துவமனை செவிலியர் என்னை அழைத்தார். “எவ்வளவு நாள் டேட் தள்ளி போயிருக்கு” “15 நாள்” “டெஸ்ட் எடுத்துப் பாத்தீங்களா” “ஆமா சிஸ்டர்” “எதுக்கும் இங்க வந்து பிளட் டெஸ்ட் எடுத்துப்பாக்கலாம்-னு வந்தேன் சிஸ்டர்” “அது மேடம் சொல்லுவாங்க” “சரிங்க சிஸ்டர்” “இந்தாங்க. போயி டெஸ்ட் எடுத்துட்டுவாங்க” என்று சிஸ்டர் ஒரு சீட்டை கொடுத்தார். அதில் சிறுநீர் கார்ப்ப பரிசோதனை செய்து, முடிவுகளை கொண்டு

Read More

ஒண்ணுமில்ல… பகுதி 42

நாற்பத்தி ஒன்றாவது பகுதியின் லிங்க்... இன்னும் சில நிமிடங்களில் நான் பயணிக்கும் விமானம் கோவை விமான நிலையத்தில் தரையிறங்க போகிறது. என்னவெல்லாம் செய்ய காத்திருக்கிறார்களோ என்று தெரியவில்லை. என் நண்பர்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள் என்பது மட்டும் நிச்சயம். பல நாட்களாக திட்டமிட்ட ஒரு காரியம் நடக்காமல் போனால் கோபம் வருவது இயல்புதானே. நான் விமானத்தை தவறவிட்டுவிட்டேன், எப்போது மற்றுவிமானம் பிடித்து கோவை வருவேன் என்று தெரியாது. ஆதனால், நீங்கள் வீட்டிற்குச் செல்லுங்கள்

Read More

ஒண்ணுமில்ல… பகுதி 41

நாற்பதாவது பகுதியின் லிங்க்... தாத்தாவும் நானும் சோபனாவுடன் தாத்தாவின் மலாட் வீட்டிற்கு வந்து சேர்ந்தோம். வீட்டிற்குள் நுழைந்தவுடன் யாரும் யாருடனும் பேசாமல் அமைதியாக இருந்தோம். சோபனா சமயலறைக்குச் சென்று மூவருக்கும் காபி போட்டுக்கொண்டு வந்தாள். அந்த நேரத்தில் அந்த காபி எனக்கு மிகவும் தேவையானதாக இருந்தது. நாங்கள் வீட்டிற்கு வருவதற்குள் சூரியன் மறைந்திருந்தது. காபி குடித்துவிட்டு, டம்ளரை அடுப்படியில் கழுவி வைத்துவிட்டு, நானும் சோபனாவும் பாட்டியின் அறையில் இருந்தோம். “திவ்யா” என்று தாத்தா என்னை அழைத்தார். “என்ன

Read More

ஒண்ணுமில்ல… பகுதி 40

முப்பத்தி ஒன்பதாவது பகுதியின் லிங்க்... எங்கோ ஆரம்பித்த நினைப்பு, எங்கெங்கோ பயணிக்கிறதே என்று யோசித்துக்கொண்டிருந்த வேளையில் ஒருவன் இன்ஸ்பெக்டர் அறையிலே வந்தமர்ந்தான். அவன் வந்தமர்ந்த தோரனையே எனக்கு காட்டிக்கொடுத்துவிட்டது இவன் தான் முக்கியமானவன் என்று. சில நிமிடங்களிலேயே என் பேத்தியும் அங்கே வந்தாள். அப்போது அங்கே நடந்ததை முழுமையாக உள் வாங்கிக் கொண்டேன். என் பேத்திக்கும் அந்த இன்ஸ்பெக்டருக்கும் கடுமையான வாக்குவாதம் நடந்தது. என் பேத்தியின் மேல் தவறில்லை என்று எனக்குப் புரிந்தது.

Read More