Monday, December 23, 2024
Home > #காதல்_தோல்வி

காதல் ஒர் தொடர்கதை… -#கவிதை

காதல் முடிவது காமத்தில்... காமம் முடிவது காதலில்... இரண்டும் முடிவது பிரிவில்... பிரிவு முடிவது...? காதலில்... ஆம்... மீண்டும் ஓர் காதலில்...   காதலர்களுக்குத் தானே... என்றும் முடிவுரை... காதல் என்றென்றும்... முடிவில்லா ஒர் தொடர்கதை... – உ.கா. அணுஅணுவாய் நினைவிருப்பாய்… என் நினைவிருக்கும் வரை… ஆகஸ்டு 31, 2024 இரவு 10.08 மணி… நான் அவனுக்காக விட்ட கண்ணீரை விட... அதிகம்... அவன் எனக்காக... என்னை நினைத்துவிட்ட கண்ணீர்...   தண்டித்தேன் அவனை... துண்டித்தேன் அவனை... ஆனால் அவனோ... மன்னித்தான் என்னை... அவனை பிரிந்ததற்காக.... – உ.கா. அணுஅணுவாய் நினைவிருப்பாய்… என் நினைவிருக்கும் வரை… ஆகஸ்டு 31, 2024 இரவு 10.30 மணி…

Read More

அவன் என்னவன்… – #கவிதை

அவன் காதலை ஏற்றுக்கோள்வோம் என்று நினைத்ததில்லை... அவனை ஏன் பிடித்திருக்கிறது என்று சொல்ல முடியவில்லை... அவன் வருகைக்காக ஏன் இப்படி காத்திருந்தேன் என்று புரியவில்லை... அவனை காணாத நாட்களில் வரும் அழுகையை கூட துடைத்ததில்லை... அவன் எனக்கானவன் என்பதில் துளியும் சந்தேகமில்லை... அவன்... அவன்... அவன்... அவன் என்னவன்... ஆனால்...   அவனுக்காக என் பெற்றோரை விட்டுவிலக மனமில்லை... அவனுக்காக என் வீட்டில் நான் உறுதியாய் போராடவில்லை... அவனுக்காக என் வீட்டாரை கூட சமாளிக்க இயலவில்லை... அவனில்லா... ஓர் வாழக்கையை நினைத்துப் பார்த்ததேயில்லை... அவனில்லா... துடிக்கும் என் இதயத்தை யாரும்

Read More

தீராக் காதல் – #கவிதை

ஏழு வருட காதலையும் துச்சமென தூக்கி எறிந்தாள் அவள் தம் பெற்றோர் சம்மதம் பெறமுடியாமல்... அகமகிழ்ந்த காதலையும் வேண்டவே வேண்டாம் என்றாள் அவள் தன் மனதை கல்லாக்கி... அவள் முடிவு இதுதான் எனில் எழுவருடமாய் அவள் தன் காதலை அள்ளித்தந்தது ஏனோ...? என்னுடன் சேர வழியேயில்லாமல் என்னை காதலித்து என்னுடன் சேர அவள் நினைத்தது என் தவறா...? என் இன்பத்திலும் துன்பத்திலும் அவள் பங்கெடுத்தது என்னை அவள் மீளத்துயரில் தவிக்கவிடத்தானோ...? துன்பமென்னும் தெரிந்தும் அவள் என்னைப் பிரிந்தாள் அது ஏனோ...? அவளை மறக்க நினைக்காத நாளில்லை... முயன்று... முயன்று... முடியாமல்... அவளை

Read More

எல்லாம் உன் நினைவாக – #கவிதை

பெண்ணே... உன் முடிவுகளை கேள்வி எழுப்பும் அதிகாரம் எனக்கில்லை... அதை தெரிந்துக்கொண்டிருக்க அப்போது எனக்கு புத்தியில்லை... அது கொடுத்த, கசப்புகளால், நீ என்னை விட்டு போகாத தூரமில்லை... இப்போது பழையதெல்லாம் பேசி ஒரு பயணுமில்லை...   உன் வாழ்க்கைப் புத்தகத்தில் நான் ஒரு பக்கம் தான்... என் நினைவுகள் உனக்கு தருவதெல்லாம் வெறும் துக்கம் தான்... என்னைப் பிரிந்ததே உனக்கு வெற்றிகரமான ஒரு துவக்கம் தான்... என்னால் இனி உன் வாழ்வில் இல்லவேயில்லை முடக்கம் தான்... உன் நினைவுகள் எழுப்பும் அலையோசையில் எனக்கில்லை உறக்கம் தான்... என்னை மூழ்கடிக்கும் அந்த நினைவுகள் தரும் வலியெல்லாம் வெறும் தொடக்கம் தான்...   என்னுள், இன்னும் நீ

Read More

வலிதீர வழியுண்டோ… – #கவிதை

காற்றில்லாமல் புயல் வருவதுண்டோ... மேகங்கள் இல்லாத மழையுண்டோ... இருளில்லாத இடத்தில் ஒளி தேவையுண்டோ... பறவைகளில்லாத வனமுண்டோ... மீன்களில்லாத கடலுண்டோ... இலையில்லாத மரமுண்டோ... அனுயில்லாத உயிருண்டோ... கனவில்லாத உறக்கமுண்டோ... கண்ணீரில்லாத அழுகையுண்டோ... வார்த்தைகளில்லாத கோபமுண்டோ...   ஆண்மையில்லாத பெண்மையுண்டோ... பெண்மையில்லாத ஆண்மையுண்டோ... காதலில்லாத பெண் மனமுண்டோ... வலியினை மறைக்காத ஆண் மனமுண்டோ... காமமில்லாத காதலுண்டோ... மோகமில்லாத ஆணுண்டோ... ஆசையில்லாத பெண்ணுண்டோ... முத்தமில்லாத கலவியுண்டோ... பெண்ணைத் தேடிச் செல்லாத ஆணுண்டோ... ஆணுக்காக காத்திருக்காத பெண்ணுண்டோ... கன்னிகழியாமல் குழந்தைப் பிறப்பதுண்டோ... வலியில்லாமல் தாய்மையுண்டோ...   தனிமையில்லாத வலியுண்டோ... காயமில்லாத காதல் தோல்வியுண்டோ... எனக்காக அவள் வர வாய்ப்புண்டோ... என் வலி தீர வழியுண்டோ....   பெண்ணே... இன்னும் நம் காதல் தோற்கவில்லை... ஆதலால்... இன்னும் நம்பிக்கையுடன் இருக்கிறேன்... நீ என்னைத் தேடி

Read More