இவ்வுலகைவிட்டுப் பிரிந்துவிட்டாய்...
என்னை தவிக்கவிட்டுச் சென்றுவிட்டாய்...
உன் மேல் சத்தியம் செய்துவிட்டேன்...
உன்னிடம் வாக்கு ஒன்றைக் கொடுத்துவிட்டேன்...
இல்லாதிருந்தால்...
நீ போன இடத்திற்கே...
உன்னுடனே வந்திருப்பேன்...
உன் முகத்தை மறக்கவே நினைக்கிறேன்...
ஒவ்வொரு நாளும்...
ஆனால்...
உன் நினைவில்லாமல் கழிய மறுக்கிறது...
ஒவ்வொரு நொடியும்...
உன்னை நினைக்காத நாளில்லை...
நீயில்லாமல் நான் நானாகயில்லை...
அன்று உன் உடலிலே உயிரில்லை...
எனக்கு அன்று முதல், ஏனோ நிம்மதியில்லை...
நீயில்லாத உலகில் வாழ
என்னால் ஏனோ முடியவில்லை...
நீ மறைந்தபின்னே
எதிலும் ஏனோ எனக்கு நாட்டமில்லை...
மரணத்தை எதிர்ப்பார்த்து
காத்திருக்காத நாளுமில்லை...
ஆனால்...
கடவுளுக்கு அதனைக் கொடுக்க
ஏனோ மனமில்லை...
இப்பிரிவை ஏற்றுக்கொள்ள
ஏனோ எனக்கு சக்தியில்லை...
உன்னைப் பிரிந்த எனக்கு
#கவிதை#காதல்#காதல்_தோல்வி#குட்டிக்கவிதை#பெண் Read More