Monday, December 23, 2024
Home > #சாதி

கேட்கிறேன் பாவமன்னிப்பு… மணிப்பூருக்காக – #கவிதை

ஆடையில்லாமல் ஓடவிட்டார்கள்... ஜாதியின் பெயராலும், இறைவனின் பெயராலும்... தடுக்க வரவில்லை... இராமனும்... அல்லாவும்... ஏசுவும்... ஆயிரம் ஆயிரம் வக்கிரம் கொண்ட கண்கள் ரசித்திருக்கும்... அந்த பெண்களின் அந்தரங்கங்களை... ஆனாலும் கோடிக்கணக்கான மனங்கள் அதிர்ச்சியில் உறைந்திருக்கும் உலகெங்கும்... நடந்ததை நினைத்து நினைத்து வருந்தியிருக்கும்... கண்ணில்லாமல் போனது அரசுக்கு... கலவரம் தேவையாய் இருந்தது ஆட்சிக்கு... இது தவறென்றே தெரியாமல் போனது மனித அறிவிற்கு... போகிறதே மனிதகுலம் அழிவிற்கு.. யாரெல்லாம் பொறுப்பு கலவரமான செயலுக்கு... களங்கமே ஏற்ப்பட்டதே இந்திய நாட்டின் புகழுக்கு... இனி கிடைக்குமா மரியாதை இந்தியர் என்னும் பெயருக்கு... ஏன் என்ற கேள்விக்கு? இராமனுக்கு... அல்லாவிற்கு... ஏசுவிற்கு... ஜாதிக்கு... என்கிறார்கள் மனசாட்சியேயில்லாமல் இன்றைக்கு... மனித செயலுக்கு இறை

Read More

வேண்டும் ஒரே சாதி… அது மனித சாதி…

ஆயிரம் இங்குண்டு சாதி... வரலாற்றில் அரசாளாத சாதியிருக்கா மீதி... அரசன் ஆண்டியாவதும், ஆண்டி அரசனாவதுமே காலத்தின் நீதி... அயர்சியில்லாத முயற்சியிருந்தால் யவருக்கும் கிடைக்காது அநீதி... வீழாத சாதியென்று ஏதும் இங்குண்டா... வாழாத சாதியென்று ஏதும் இங்குண்டா... இல்லை, வரலாற்றில், யாரையும் அடிமைப்படுத்தாத சாதியென்று ஒன்றுண்டா... நல்லெண்ணம் கொண்டவன் வாழாத வரலாறு இங்குண்டா... தீய சக்திகள் வீழாத வரலாது இங்குண்டா... வென்றவனின் வரலாறு கிடைக்காமல் இருந்ததுண்டா... தோற்றவனின் வரலாறு எங்காவது கிடைத்ததுண்டா... வரலாற்றை வரலாறாய் எவரும் பார்பதுண்டா... ஆதலால் வரும் மோதலை எவரும் தவிர்ததுண்டா... இனி யாரும் பேச வேண்டாம் சாதி... இனி

Read More